பொருளற்றவாழ்க்கை / nihilism – ஒரு எளிய வெள்ளோட்டம்

பொருளில்லாத் தத்துவத்தின்/nihilism மூலம் அன்றாடவாழ்வைக் காணுங்கால் சராசரி உணர்வுநிலைத்தாண்டிய முழுமையுணர்வை எப்படிக்காணலாம் என்பதையறிய விழைந்ததால் உண்டானது இக்கட்டுரை.

1. உள்ளுணர்ந்து ஒருவர் இயங்குகிறாரோ இல்லையோ, பொதுவாக, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவருடைய உள்ளம் மகிழ்வாகவோ துன்பமாகவோ, இல்லை, எந்தவுணர்வுநிலையையும் சாராமலோக் கூட இருக்கலாம்.

2. அல்லது இறந்தும் விடலாம்

3. அவரின் இருப்பும் இறப்பும், உணர்வுப்பூர்வமாக மற்றோருக்கும் பாதிப்பை உண்டாக்கலாம்.

4. ஏதும் தேங்குவதில்லை, தங்குவதுமில்லையென்று எல்லாரும் உணர்ந்திருந்தாலும், ஒரு உந்துதலைப் பெற்றிருப்பதனாலேயே வாழ்க்கையை வாழ்கிறோம்.

4அ. ஆயினும் அவ்வகையான உந்துதல் பெரும்பாலும் அர்த்தமற்றது அல்லது தொலைநோக்குப் பார்வையில்லாது, அந்தந்த நேரத்துக்குத் தேவைக்காக செயல்படுவது.

5. இதில், பிரச்சினையென்னவெனில், இவற்றையெல்லாம் கற்றோர் கல்லாதார் எந்த நிலையில் இருந்தாலும், ஒரே மாதிரியான, படிவத்திற்குள்ளேயே சிக்குண்டிருக்கிறோம்.

6. சில படிவங்கள் கவித்துவமானவை (artisitic interpretations மெய்ஞானப் புலம்பல் போல), சில பொதுவோட்டத்தில் இருப்பவை (சொந்தபந்தங்களிடம் புலம்புவது). எப்படியிருப்பினும், திரும்பவும் முதலாம் கருத்திலிருந்தே தொடர்ந்து ஓடும்.

7. இவ்வகையில் எதுவாக இருந்தாலும், வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

8. இடாய்ச்சு/(David Deutsch, a quantum physicist) அவர்கள் கூறியதாக சேது (@Sethu Subbar)க் (https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&reply_comment_id=1834432536638687&comment_tracking=%7B%22tn%22%3A%22R%2321%22%7D) குறிப்பிட்டிருந்தது போல், மொத்த சூரியக்குடும்பமும், பேருணர்வுப் பெற்று சத்யயுகம் போல் இருந்தாலும், இதே போன்றநிலையிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

9. இப்படியெல்லாம் பொருளற்றதாக இருப்பதனாலேயே, எதன்மீதும் பற்றற்று அன்பாக இருக்க வாய்ப்பு உண்டு. இடாய்ச்சுமுறையில் பேருணர்வு கொண்டு இயங்குவதாக இருந்தாலும் அன்பையுணராத் தன்மை சமூகத்தில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

(விட்கன்சுடைன்/Ludwig Wittgenstein போல ட்ரேக்டடஸ் போல கூற்றுவகையில் எழுதத் தலைப்பட்டேன். குழப்பங்களைத் தவிர்க்க, விளக்கித் தொடர்கிறேன்.)

இதற்கெல்லாம் மொத்த அர்த்தந்தான் என்ன? ஊழ்வினை போன்றவற்றை நம்பினாலும், நம் தேவைக்கேற்ப நடப்பில் அவரவர் வசதிக்கு வாழும் முறைமையும் உள்ளது. முழுமையுணர்வையெட்ட பலவழிகள் என்பதும் ஒருவழியென்பதும் அவரவரின் வரையறைகளைப் பொருத்தது. இங்குள்ளப் பெரும்பாலான பிரச்சினைகளுக்கானக் காரணம், வழிகள் இருக்கிறதா இல்லையா என்பதும், நாம் செய்வது சரிதானா என்ற ஒப்புமைக் குழப்பத்தினாலும் தான்.

ஓர்ந்த ஓர்நிலையென்றுக் (union) கூறிக்கொண்டே, ஈர்நிலைகளையோ (நான், மற்றவர்கள்), பல்நிலைகளையோ (நான், சார்ந்தோர், சாராதார்) தேவைக்கேற்பப் பார்க்கவேண்டியிருக்கிறது. இங்கு பல்நிலைகள் என்பது, நான் என்பதற்கும் நான்-தவிர்த்த மற்றவர்களுக்கும் இடையேயானத் தொடர்பு. செய்யவேண்டியதற்கும், செய்யவியலாதநிலைகளுக்கும் இடையேயானத் தொடர்புகளையும் குறிக்கிறேன். இவ்வளவு விவாதம் நடைபெறும்போது, நாம் நம்முடைய உணர்வுகளை உருக்கி வார்க்கக்கூடிய வார்த்தையைத்தான் தேடுகிறோமேயொழிய அந்த ஓருணர்வைப் பெறுவதில்லை.

அதுபாட்டுக்கு இயங்குமொன்றுக்கு விளக்கங்கள் தந்து அதன் வடிவத்தைப் பெறமுயல்கிறோம்.

இதில் புறத்தில் உள்ளதா, அகத்தில் உள்ளதா என்பதும், இக்குழப்பங்களினால், இன்னும் பிரச்சினைகளையுண்டாக்கும் என்பதும் என் எண்ணம். வெளியெல்லாம் இழைகளாக/strings, ஆற்றற்றுடிப்புகளாக/vibrations இருக்கும் என இயற்பியல் கூறுகிறது. அவற்றைக் காணவும் இயலவில்லை, அதேநேரம் உணரவும் (lhc experiments) இயலவில்லை, ஆனால் அது இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுகிறது.

இருப்பதற்குவாய்ப்பேயில்லையெனினும், நானொரு தொடர்-பருப்பொருளில்லையென்பதையும் (continuous body) இவ்வுடலத்திற்கென ஒரு அணுக்கட்டமைப்பும், அக்கட்டமைப்பில் உள்ள அணுக்களுக்கிடையே இடைவெளியுள்ளது என்பதையும், ஓரளவு இயற்பியல் விளக்கமுடியும். அப்படியானால், ஒரு சல்லடைபோல், இந்த நேர-இடப்புள்ளிகளில் இயங்கித்திரிகிறேன். அதாவது, அணுக்களுக்குள்ளும் புறமும் வெளி/space உள்ளது. ஆக, நாம் நம்மை முப்பரிமாண சல்லடையெனலாம். (நம்மில், அதிகப்பரிமாணங்கள் மற்ற அடிப்படைத்துகள்களுக்குத் தெரியலாம், புரியவில்லையெனில் விட்டுவிடலாம்)

ஒருப்புள்ளியிலிருந்து இன்னொருப்புள்ளிக்கு நகரும் ஊடுருவக்கூடியக் கதிர்கள், நாமாக மாறி, பின் வெளியேறி வேறொன்றாக வெளியேறவும் இயலும், இதனாலேயே, எனக்கு எல்லோரும் ஒருவகையில் சம்பந்தப்படலாம் எனத் தோன்றும். என்னுடலில் நுழைந்து மற்றோர் உடலில் நுழைந்து வெளியேறும், இழைகளோ/strings அல்லது துகளோ/particles இவ்வாறுத் தொடர்பை உண்டாக்கலாம், அந்தத் தொடர்பு அதிகநேரமோ, குறைந்தநேரமோ இருக்கலாம். இதனாலேயேக் கூட, ஒரு வேளை, இடாய்ச்சு அப்படியொரு முடிவுக்கும் கூட வந்திருக்கலாம். (அல்லது, உயிர்பொறியியல், சைபர்னெடிக் உயிரினம் சார்ந்த ஆய்வுத்துறை வளர்ச்சியினால் கூட கூறியிருக்கலாம்)

அதாவது, ஆரம்பத்தில் இருந்தே, ஒரு விசயத்தைக்கூறிவருகிறேன், வைரஸ், வயிற்றிலுள்ள நுண்ணுயிர் பாதிப்பினால், ஏற்படும் உயிரியல் கொந்துதல்/hacking, வேதிக்கொந்துதல், வேறுவகையானத் தொழிற்நுட்ப கொந்துதல் மூலம் எந்நேரமும் நாம் நாமாக இருப்பதாக நினைக்கிறோம், செய்கிறோம், ஆனால், அது உண்மையில் நாமாக இல்லாமலும் இருக்கலாம் என்பது.

ஆக, நான் என்று யோசித்திருப்பதை சரிவர செய்கிறோமா என்பதே நமக்குத் தெரியவில்லையெனில். எது சரியாக இருக்கமுடியும்.

நாம் முழுமையுணர்வுபெறுவதற்கு பற்பல வழிகளையமைத்திருக்கிறோம், ஆனால், அவ்வழிகள் பெரும்பாலானோர்க்கு எதையும் காண்பிப்பதில்லை. நாம் முழுமையுணர்வுக்கான வழியில் இருக்கிறோம் என்பதும் இல்லையென்பதும், இயல்பில் ஒப்புமைப்படுத்துதலில் வருவது. மேலும், ஒருவேளை முழுமையுணர்வு பெறுவதற்கான வழிமுறைகளாக நாம் கொண்டிருக்கும் வழிமுறைகளைக் கடந்த வேறொன்றாகவும் இருக்கலாம்.

தவிர, எனக்கு முழுமையுணர்வு பெற்றவர்கள் ( புத்தர், சித்தர்கள்) எதையும் பெரிதாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுமில்லை. வாழ்வின் போக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அது சரியானதாகத் தான் இருக்கிறது என்பதே அவர்களின் பதிலாக இருக்கும் எனத் தோன்றும், அவ்வாறே இதுவரை இருந்திருக்கிறது. சொடுக்கிடும் நேரத்தில் நம்மாலேயே பலவேலைகள் செய்யவியலும் போது, வல்லமையுள்ளவர்களால் இன்னும் பெரிதாகவே செய்யவியலும் என்பது, எந்தவொரு பாமரனின் கருத்தாகவேயிருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை, இல்லையெனில், மொத்தமாக, எல்லோருக்கும் மோட்சகதி அருளியிருக்கலாம்.

ஆக, சமூக வளர்ச்சி அதுபாட்டுக்குப் போகும், மாந்த உளப்போக்கு சீரடைவதும் அதுபாட்டுக்கு நடைபெறும், இந்த இடைவெளியில் நாம் தத்துவங்கள் பழகுவதெல்லாம், உளப்போக்கு மென்மேலும் சீராவதற்கும் சமூகத்தின் ஓட்டத்திற்கும்/நடைமுறைத் தேவைக்கும் இடையேயான இடைவெளியை சரிசெய்வதற்கென்று எண்ணுகிறேன். உதாரணத்திற்கு, ஞானியருக்கு சரி தவறென்று ஏதுமில்லையென்பர். அதையொரு சமூகம் அல்லது சாதாரண மனிதர் ஒப்புக்கொள்ளமுடியாது, சரி தவறு பகுக்கப்படவேண்டியது முக்கியமானதாகவேக் கருதுவர்.

அதாவது, ஒரு சமூகம் தீங்குவிளைவிப்போருக்கென்று சட்டங்களை இயற்றியிருக்கும். அதற்கு நல்லதகெட்டதைத் தேர்ந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும். அது சாதாரண மக்களுக்கும், ஒரு கொலைகாரருக்கும்/பெருஞ்சண்டைக்காரருக்கும் இடையேயான உளப்போக்கின் வித்தியாசங்களைக் கணக்கில் கொண்டு, பெருஞ்சண்டைக்காரரினால், உண்டாகக்கூடிய கேடுகளிலிருந்துக் காப்பதற்கு விதியமைக்கும்.

விதிகளைப் படைத்ததனாலேயும், அதை எல்லோருக்கும் உணர்த்துவதன்மூலமும் சமூகம் சரியாக ஆகிறதா?! விதிகளை சரிவரக்கடைப்பிடித்தால் எல்லாம் சரியாகுமா?? ஒரு வேளை, சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் துறவியானால் எல்லாம் சரியாகுமா? இரண்டிலும் வழிதவறி அர்த்தமற்றதாகும் வாய்ப்புகள் உள்ளது, ஆகவே, வாழும்வரையில் செய்யவேண்டியவை என நமக்கு உணர்த்தப்பட்டதையும், அந்நேரத்துக்கு ஆகவேண்டியதையுமேச் செய்கிறோம். அதாவது இயல்புநிலையிலேயே இருக்கிறோம்.

முழுமையுணர்வு வாய்த்திருக்கவேண்டியதொரு தருணத்தை ஒருவர் தவறவிட்டுவிட்டார் எனக் கொண்டால், அதற்கான தீர்வுதான் என்ன? கிரியா யோகம் போன்று மனத்தையும் உடலையும் தீட்டிவைத்தும், முழுமையுணர்வை எட்டாதக் கதைகளைக் கேட்டிருக்கிறோம் தானே. ஆதலால், கடவுளர் பத்தியென்பது எல்லாம், இவ்வளவுக் குழப்பங்களின் நடுவே நடத்தவேண்டியதை நடத்துவதற்கென்பது என் எண்ணம்.

அது சரியான நேரத்தில் தூங்காமல் சுகம்பெறுவதாகக்கூட இருக்கலாம், அல்லது வேறெதாவதாகவும் இருக்கலாம். இப்படி இருநிலைகளில்–அதாவது, 1. எனக்கு வழிமுறைத் தெரியும், 2. ஆனால் இன்னும் போய்ச்சேரவேண்டிய இடத்திற்குச் சென்றடையவில்லையென்று உணர்வது –இவ்விருநிலைகளினால் ஏற்படும், உடல்-உளத்தாக்குதல்களும் (affecting psychosomatically) பெரும்விளைவை உண்டுபண்ணக்கூடியவையென யோகசூத்திரங்கள் சொல்கின்றன.

இருப்பின் புதிருக்கானத் தீர்வுகள், மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலாமுறைகளிலும், அதாவது கட்டமைக்கப்பட்டவழிகளில் இல்லாமல், கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எல்லாம் பொருளற்றதாக ஆகும்போது எல்லாம் எளிதானதாகவும் ஆகும், அதாவது, தேவையற்றதைச் செய்வதால் முழுமையுணர்வுத் தருணம் தவிர்க்கப்படலாம், அது முழுமையுணர்விற்கானப் பயிற்சியென்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, அது அதனாலேயே வாய்க்காமல் போகலாம்.

ஆக, சாதாரணமாக இருப்பதும், முழுமையுணர்வை அருளலாம். கடைசியாக, முழுமையுணர்வும் ஒன்றுமில்லாததாகப் பொருளற்றதாக இருக்கலாம்.

குறுக்கியற்பார்வை, அறிவியல் நடைமுறைகள்…

https://www.facebook.com/sethu.subbar/posts/1827768703971737?comment_id=1832085526873388&comment_tracking=%7B%22tn%22%3A%22R%22%7D  விவாதத் தொடர்ச்சி..

இயற்பியலின் ஆய்வுவரையறையென்று பொதுவாக, நாம் குறிப்பிடுவது போல், அதுவொரு எல்லைக்குள் அலகிடப்பட்டதல்ல, ஆய்வுநடைமுறையில்! இங்கே குழந்தைகளுக்கான ஊடாடலுக்காக இதை சேது எழுதியிருப்பதால், வரையறைக் குளறுபடிகளுண்டாகா வண்ணம் இருக்க இதையிங்கேக் குறிப்பிடுகிறேன்.

நாம் உணர்ந்த இயற்பியலேக்கூட, சமூக, உள, உயிரியற்றளங்களில் நடக்கும் இயக்கங்களையும் காண்பிக்கிறது. ஆனால், இன்னும் சமன்பாடுகளால் உணர்த்தமுடியாத நிகழ்வுகளை விளக்கமுடியாவிட்டாலும், அவற்றை, நாம் அறிந்த அறிவியலோடு நிற்பதில்லை. குறுக்கியப்பார்வையானாலும், அது படிப்படியாக விசாரங்களின் மூலம் வளரும். அறிவியல்/இயற்பியல் விசாரங்கள் இருவகையானவை, 1. சோதனையின் மூலம் அறிவது. 2. கோட்பாட்டுமுறைமையின், அறிவியற்கட்டமைப்பின் மூலம். கோட்பாட்டுமுறைமை, புதிய இயற்பியலுக்கும் கணிதத்துக்கும்–அதாவது, நிகழ்கால இயற்பியலையும், கணிதத்தையும் தாண்டும் முயற்சிகள்– வழிவகுக்கும்.

இவ்வாறு சோதனையின் மூலம் காணவியலாத, புதிதாகப் படைத்தவற்றை, இயற்பியல், கணித கட்டமைப்பின்/foundation of physics and maths, வாதங்களின் மூலமும், தெரிந்த, தெரியாதக்கோட்பாடுகளின் மூலமும் அலசி ஆராய்ந்து வழிகளை உருவாக்குவார்கள். தக்கது நிற்கும், சிலசமயம் ஒரு புதியக் கோட்பாட்டை வெளியிட்டும் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, வருடாவருடம் இப்படி பல வருகின்றது! ஆயினும் திடீரென, சில கோட்பாடுகள், 50, 60 வருடத்திற்கப்புறம் ஏதாவது புதியக் கோட்பாட்டின் மூலமாகவோ அல்லது சோதனையின் மூலமோ பெரிதாக வளர்ந்து நிற்கும்.

இப்படி ஒருவர் செயல்பாடாக இல்லாமல், பலரின் செயல்முறையாக சமூகவளர்ச்சிக்காக வளர்ந்தாலும், நிறைய ஆய்வாளர்கள், உள்ளுக்குள் ஒரு யோகியைப் போல் கேள்விகள்கேட்டுத் தேடினாலும், வெளிக்காட்டிக்கொள்வதில்லை, பலநேரங்களில்ன தேடலுக்கும், கண்டுபிடித்ததற்கும் இடைவெளி சிறிதாக இருந்தாலும், நிரூபணம் தெளிவானால் தான் வெளியிடுவதென்பது, அவர்களின் வழக்கமாகக் கொள்வதால், வெளியில் பெரிதாகப் பேசுவதில்லையென்பதாகத் தான் நான் காண்கிறேன். சில சமயங்களில் வேறொருவர் அதேமாதிரியானத் தேடலைக் கொண்டிருந்தால், அவர்களின் வெளியிடாப் பரிமாணங்கள் வெளிவரும்.

உணர்வுநிலையாலானக் கலைஞர்கள், உணர்ந்ததை வெளியிடுவதற்கான வரையறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை. யோகிகள் அதையும் தாண்டியநிலையிலுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது என் அனுமானம். யோகியர்நிலைபோன்றவொன்றின் மூலம், இயற்பியலை அதாவது, இயற்கையைக் காணுங்கால், இன்னும் நிறைவான அறிவைப் பெறவியலும் என்பதும் என் அனுமானம். அதை நோக்கி தெரிந்த ஆய்வாளர்கள் பலர் நகர்கிறார்கள்.

இது எப்பொழுது வெவ்வேறுவகைப்பட்டத் துறைசார்வல்லுநர்கள் அனைவரையும், எல்லாவகையான அறிவியலையும் பிணைக்க ஆரம்பித்தோமோ, அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது. ஒருவகையில் இதுவொரு சிறப்பான செயல்பாடுதான், தத்துவவாதிகள் இடையில் புறந்தள்ளப்பட்டார்கள் என உணரவும் ஆரம்பித்திருக்கிறோம், இப்படி உணர்வதே மிகப்பெரிய மாற்றந்தான்.

இதுதான் வழியென்று ஆன்மீகவழியில் கூட ஒருவழியில்லையென்கிறார்கள். சிலர் உள்ளில் நீள்கிறார்கள், சிலர் கர்மத்திலுறைகிறார்கள். இது ஆன்மீக-அறிவியல் விவாதம் எனக்கொண்டாலும் ஆன்மீகத்திற்குள்ளேயே முரண்படுகிறார்கள் (இதில் தனியாகப் பேசவேண்டியது நிறைய உண்டென்றாலும்), தன்னையறிதல் போன்றவை எனக்கு பிரச்சினையில்லை. நானொரு காளியம்மையின் பத்தன் தான். ஆக, முழுமையானவுணர்வு போன்றவற்றை, இப்படி எல்லாவற்றையும் சார்ந்த ஆய்வை உருவாக்கும்போது, பொதுசனப்படுத்த முடியலாம், தங்களின் வரையறைகளும் அலகுகளும் மாறலாம்! David Bohm-JK கிருட்டிணமூர்த்தி கூட்டுவிவாதங்களும் கூட இதுபோன்றதொரு ஒரு உந்துதல் தான். ஆக நீங்கள் விரும்புவதுபோல் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆயினும், இது போதாது. எல்லாவழியிலும் அறிந்தால் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் ஆகும்! பார்க்கலாம்! 

Reductionism and emergence – a naive argument

I do not understand why biologists consider physicists’ perception about the reality is so indifferent!!  I feel it is rather an opinionated point of view.

In a discussion, a friend quoted a work of Stuart Kauffman and his stance on the complexity theory and reductionist point of view.

Actually, we get to the reductionist results due to insufficiency and inability of available ‘computing’ resources, thus leads to the incompleteness in presenting the reality. So, the reduced reality give at least some understanding about the minimal system and interactions. It might not give the better description, however, not reducing it to the physical aspects of the system might not be possible. For example, assuming a biological cell as a function or functional, would not be ‘complete’ without the implications of theoretical chemistry, which incorporates the most of quantum&classical and statistical physics. It depends on what level they want to work out.

We try to describe the physical reality of natural phenomena, by adding complexity/ more details. Moreover, the macroscopic emergence and the critical phenomena occurred in the collection of atoms and molecules can not be ignored, could possibly infer a difference in the emergent behavior. In the “lovers on the banks of Seine” example, even an unintentional teasing (i.e., a word) can trigger and spoil the mood, ambience, etc. When one of the couple is, subjectively tolerant, this interaction would be still pleasant.

If one of them can be possibly affected by a trigger–pain,illness or anything affecting his/her ‘behavioral equilibrium’, same system-trigger composition would affect their state of mind.

If one of them is a practicing-yogi, the same composition of the interacting parts(system-environment-trigger) and the state of mind would not be affected.

I think the present state of the emergence problem is just due to the insufficient resources which we consider and most importantly how much of the reality we are interested in. When the couple wants to be happy, they just do the things which please them the most.

But if I want to be a trend-setter, I need to change the very basic ideas of the norms set. I could go deeper and deeper by adding additional levels and change the things in a completely newer level.

Sometimes, the natural process might be redundant or may contain voluminously unnecessary information. Therefore, picking the limits depend on which level I seek.