பழைய அறிவியற்கூறுகளை நவீன அறிவியலர் காண்கையில்…

பதினொன்றாம் வகுப்பு NCERT பாடங்களை பல்வேறு அறிஞர்களைக்கொண்டு மொழிமாற்றம் செய்துவருகிறோம், இதை வெறும் மொழிமாற்றமாக இல்லாமல், அனுபவங்களில் பெற்றதையும் உள்ளிட்டு எழுதுகிறோம். அதில், தற்சமயம், நானும் வரிசைத்தொடர்களைப்/sequences and series பற்றி ஒரு பாடம் எழுதிவருகிறேன். அதில் அவ்வப்போது இந்திய அறிஞர்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். அனேகமாக, கீழ்க்காணும் இச்சேதியும் அவ்வரிசையில் உவப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

எதேச்சையாக, நேற்று ஒரு இயற்பியலர் நண்பர் இரகு மகாசன், மாதவன் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்திய கணிதவியலர் மாதவர் கேரளத்தில் 14/15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், கேரளக்கணித மற்றும் வானியற்பள்ளியை நிறுவியவர். அப்பள்ளியில் அல்லது சிந்தனைக்கோட்டத்தில் நுண்கணிதம் உருவானதாக— அதாவது, இலெய்பினிச்சு, நியூட்டனுக்கும் 300/200 வருடங்களுக்கும் முந்தியே — தரவுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவை அவ்வப்போது கணிதப்பனுவல்களில் அங்கீகரிக்கப்படுவதையும் காணவியலுகிறது.

இரகு குறிப்பிட்டிருந்தது, \pi/4 = 1 - 1/3 + 1/5 -1/7 + \ldots என்பதை மாதவரும் அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ஆதலால் இத்தொடர் மாதவர்-இலெய்பினிச்சு தொடர் என்று அறியப்படுகிறதாம்.

கணிதத்தில், யாதொரு முடிவுறாவட்டம் வகையிடக்கூடிய (இடைவெளியிலா, வழவழப்பான/smooth, continuous) வளைக்கோட்டுச் சார்பையும், அச்சார்பின் மாறியின் வகையீட்டு வரிசைகளை 0,1,2,3, … முடிவிலி தடவைகள், a எனும் புள்ளியில் வகையிட்டுப் பெறும் வகைக்கெழுக்களின் முடிவிலாக்கூட்டுத்தொகையாக விரித்து எழுதிவிடமுடியும். இது ஒரு பொதுவான சார்புக்கு எழுதப்பட்ட இடெய்லர் தொடர் எனலாம்.

f(x-a) = \sum_{n = 0 }^{\infty}\frac{f^{n}(a) (x-a)^n }{ n!} இதில் (n) என்பது வகையீட்டுவரிசையின் எண். முன்பேக் குறிப்பிட்டதுபோல், இது பொதுவான சார்பிற்கு எழுதப்பட்டது.

மாதவர் இதே மாதிரியான அடுக்குத்தொடரை முக்கோணச்சார்புகளுக்கு சைன், கோசைன், நேர்மாறு-டான் சார்புகளுக்கு சூத்திரம் பாடியிருக்கிறார், அப்பாடலின் விளக்கம் இந்த அடுக்குத்தொடர்களாக விரிகிறது.

இச்சார்புகளுக்கானத் தொடர்கள் மாதவரின் பிற்காலத்தில் மேலைத்தேய அறிவியலர்களான நியூட்டன், இலெய்பினிச்சு, கிரிகோரி ஆகியோரால் தனித்தனியேக் கண்டறியப்பட்டது. இத்தொடர்கள், அண்மைக்காலங்களில், மாதவா-நியூட்டன், மாதவா-இலெய்பினிச்சு, மாதவா-கிரிகோரி என மாதவருக்கான அங்கீகாரத்தோடு பெயர்பெற்று விளங்குகின்றன.

ஆயினும், மிகவும் புகழ்பெற்ற இளம் கோட்பாட்டியற்பியலரான சுவரத் இராஜூ, இவ்வங்கீகாரங்கள் வேறுவழியில்லாமல் தரப்படுகின்றன, மேலும் இன்னும் பல இந்திய, ஆப்பிரிக்க, பெர்சிய பழங்கால கணித அறிவியலாய்வுகள் கிரேக்கத்துள் திணிக்கப்பட்டு அதன் ஆரம்பத்தை மறைத்து கிரேக்கவழிவந்ததாகக் குறிப்பிட முயல்வதாகக் கூறுகிறார்.

பிதாகோரசின் தேற்றத்தின் மாற்று/பொதுவடிவான பெர்மா (Fermat)வின் தேற்றம் அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

a^n + b^n = c^n , இச்சமன்பாட்டில் n>2 க்கு சரியான a, b, c எனும் எண்கள் அமையாது. என்பது பெர்மாவின் ஊகமாக (conjecture) 350 வருடங்களுக்கும் மேல் அறியப்ப்பட்டிருந்தது , பின்னர் ஆன்ரூ வைல்சு இக்கணிப்பை சரியென நிரூபித்தார்.

சைமன் சிங் அவருடைய நூலில் பெர்மாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் சீண்டலுக்குப் பெயர்போன அரசு ஊழியர் என குறிப்பிடுகிறார். அதுவும் ஆங்கிலேயக் கணிதவியலர்களை வம்புக்கிழுப்பதில் மிக அலாதியான இன்பம் கண்டதாகவும் குறிப்பிட்டிருப்பார், அவர்தம் பெர்மாவின் கடைசித்தேற்றம் நூலில்! பெர்மா தனது கண்டுபிடிப்புகளை பிரசுரிப்பதை ஒருபொருட்டாக எண்ணியதே இல்லை, அவருடைய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அவருடைய கடிதத்தொடர்பாடலிலேயே இருந்து அறியப்பட்டது. பெர்மாவின் கடைசித்தேற்றம் கூட அவர் இறந்து 30 வருடங்களுக்கு அப்புறமேத் தெரிந்ததாம்.

இதேமாதிரியான மற்றொரு கணக்கு பெல்லின் சமன்பாடு என்று அறியப்படும் a^2 - n b^2 =1 சமன்பாட்டின் தீர்வானது பெர்மாவால் யாரிடமோக் கேட்கப்பட்டிருந்தது போல் தெரிகிறது. இக்கணக்கின் விடை மிகவும் அரிதான மீப்பெரும் எண்களைக் கொண்டது a = 1766319049, b = 226153980, n = 61 .

இதே கணக்கை இந்திய வானியலர் கணிதவியலர் பாசுகரர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவிழ்த்ததாக/தீர்த்ததாகத் தெரிகிறது. ஆக இவ்வளவு குறிப்பிட்டத்தீர்வைக் கொண்டிருக்கும் ஒரு சமன்பாட்டை பெர்மா எப்படியோ அறிந்திருக்கலாம், ஆனால், அவர் பாசுகரரை மேற்கோளிடாமல் தவிர்த்திருக்கிறார் என ஐரோப்பிய வரலாற்றாளர்கள் குறிப்பிடுவதாக சுவரத் இராஜூ குறிக்கிறார். தற்பொழுது இச்சமன்பாடு பெல்லின் சமன்பாடு (Pell’s equation) என சம்பந்தமில்லாமல் யாரோவொருவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. நுண்ணரசியல்கள், உயர்த்திப்பிடித்தல் எனப் பல்வேறு வீணானக் காரணிகள் பல அறிவியல்விசயங்களையும் உழப்பிவிட்டுவிடுகிறது.

மனித இனம் அல்லது நம் முன்னோர்கள், தான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் தத்தம் சூழ்நிலையை உணர்ந்தும், அதை சமாளித்தும் இருந்ததாலேயே நாம் இன்று உயிரோடிருக்கின்றோம். ஆக அறிவியல் என்பது நம்மைப் பொருத்தவரை மிக இயற்கையானது. எது அறிவியல் என்பது கலாச்சாரத்தையும் நவீன அறிவியற்போக்கின்படியும் வரையறுக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சியெண்ணமும் நுணுங்கி ஆய்ந்துத்தேர்வதும் அறிவியலை வளர்த்தெடுக்கும். இதை கூறுதற்கான அவசியம், பழம்பெருமை வேண்டாம், ஆனால் பழையக் கண்டுபிடிப்புகளை பிறர் அறிய விளக்குதல் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்கே. இன மொழி பண்பாட்டு உயர்வுதாழ்ச்சி சொல்லாது, அறிவை அறிவாகக் காண்போம்.

பீல்ட்சு மெடல் வாங்கிய பேரா. மஞ்சுள் பார்கவ் இந்திய கணிதவியலர்களைப் பற்றிப் பேசிய ஒரு விரிவுரையைக் காணலாம். https://www.youtube.com/watch?v=EcjHccvahHk

எ.ச. ஜார்ஜ் சுதர்சன்

எ. ச. ஜார்ஜ் சுதர்சன் சகக்காலத்தில் வாழ்ந்த மிகமுக்கியமான இந்திய இயற்பியலர். என்னை மிகவும் ஆழ்ந்துபாதித்த இயற்பியலர்களுள் இவரும் முக்கியமானவர். இன்று அவர் இறைத்திருவடிகளுடன் கலந்துவிட்டார்.

அவருடைய ஆய்வுப் பரம்பரையில் நேரடியாக வந்தவனாக என்னைக் கொள்ளவியலாது, ஆயினும் நான் சிறிதுகாலம் இணைந்து வேலைசெய்த இந்திய வானியற்பியற்கழகத்தின் பேராசிரியர் சிவராம் அவர்களின் ஆசிரியர் சுதர்சன் அவர்கள்.

(நோபல் பரிசு வழங்கப்பெற்ற) வலுவிலா இடைவினை/weak interaction, குவாண்டம் சீனோ விளைவு/Zeno effect, நோபல் பரிசு வழங்கப்பெற்ற சுதர்சன்-க்ளௌபர்/Sudarshan-Glauber representation குவாண்ட ஒளியியல் வழிமுறை, டாக்கியான்/tachyon எனப்படும் ஒளியினும் அதிதிசைவேகத்துகள், குவாண்ட நேரியல், ஆற்றல் தேய்வியல்/decoherence, dissipation போன்ற புலங்களில் ஆய்வை மேற்கொண்டும், மேற்குறிப்பிட்டப் பலமுறைகளையும் புதிதாக இயற்பியலில் கண்டறிந்தும் தந்தவர்.

இவரின் கண்டுபிடிப்புகளுக்காக ஒன்பதுமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பெற்றவர் எனக்கூறப்படுகிறது. ஆயினும் ஒருமுறைகூட வழங்கப்படவில்லை. கடைசியாக 2005ஆம் வருடம்- சுதர்சன் -க்ளௌபர் வழிமுறைக்காக, க்ளௌபருக்கு நோபல் பரிசு வழங்கிவிட்டு, இவரை விட்டதையடுத்து, இவரே நோபல் குழுமத்துக்கு மடலெழுதி தன் கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

வேத, வேதாந்தங்கள் போன்ற இந்தியத் தத்துவங்களில் மிகவும் ஆழ்ந்து இயற்பியலை/உண்மையைத்தேடியவர். உலகளாவிய ஆய்வில் புகழ்மிக்கவராய்த் திகழ்ந்த அதேநேரம், இந்திய இயற்பியல் ஆய்விலும், தத்துவார்த்தத் தேடலுக்கும் மிகுந்தப் பங்கினை ஆற்றியவர்.

தத்துவக்கூடை: இருப்பு/existence, அறியொணாமை/agnosticism, வெறுமை/emptiness and a physicist! :-p

நேற்று இராமசாமி செல்வராஜ் மற்றும் சுந்தர் இலட்சுமணன் அண்ணன்களின் மிக அழகான  ஆழமானத் தத்துவார்த்தப் பேச்சின் கருவைக் காணநேர்ந்தது.

“”வணக்கம் வணக்கம். எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்து ஒரு சுழற்காற்றில் ஏறியமர்ந்துகொண்டால், அப்படியே சென்று வாழ்வியல் மெய்யியல் சமூகவியல் தத்துவவியல் உடலியல் உள்ளத்தியல் தமிழியல் மொழியியல் இலக்கணவியல் என்று ஒரு பெருஞ்சுற்றே வந்துவிடலாம். இன்னும்கூட இருக்கலாம். நம் வடிகட்டியில் சிக்கியது இவ்வளவுதான்.”

“ஏன் இங்கு இருக்கிறோம் சுந்தர்? இதற்கான விடை இல்லையே”, என்றேன்.
“இன்னும் ஒருபடி மேலே போங்க. இங்கு நாம் மெய்யாகவே இருக்கிறோமா?”, என்கிறார்.
ஆகா.
தின்ற உணவு செரிக்கக் குடித்த இஞ்சியெலுமிச்சைச் சாறும், மசாலாத் தேநீரும் கூட நமது இருப்புக்குச் சான்று தானே.” —

அதில் கலக்கமுடியவில்லையே என்ற நினைப்புடனேயே என்கருத்துக்களையிட்டிருந்தேன், பின்பு அவர்களின் கருத்தைத்தொடர்ந்து என்கருத்தை நாலேநாலு வரியில் எழுத ஆசைப்பட்டேன் ஆனால், “இம்புட்டுப் பெரிசையெல்லாம் போடமுடியாது போவென”, ஃபேஸ்புக்கே உமிழும் அளவுக்கு மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது.  எனக்கும் வலைப்பூவில் எழுதினால் டைரிக்கு வசதிதான்!

சிசிறிது நேரத்திற்கு முன்பு, என்னுடையப்பதிவில் தங்களின் கருத்துக்கு கருத்திடும்போது, தற்செயலாக என்ற வார்த்தையை, எழுதும் போது, பல விசயங்கள் தோன்றியது. என்னுடைய அனைத்துப்பதிவுகளுக்கும் காரணங்களான, ஏனிந்தப்பதிவு என்றுக்கேட்பதற்கு எப்பொழுதும் ஒரு “தற்செயலான” காரணமிருக்கும்.   அதைப் பெரும்பாலும் என்னுடையக் கட்டுரைகளில் ஏனெழுதினேன் என குறிப்பிடவும்செய்வேன், தங்களுக்கு குறிப்பிட்டதுபோல்–நேரம், குவாண்டம் சீனோவிளைவு, வெப்பியக்கவிதிகள்! அவையனைத்தும் ஏதோவொரு கோணத்தில் இருப்பைக்கேள்விப்படுத்துவதைச்சார்ந்தே இருக்கும், ஆனால் ஏனிந்த இருப்பு, என்பதன் ஆழம் கொஞ்சம் அதிகமானாலும் பிடித்துவிடலாம் என்பது நம்பிக்கை, ஒருவேளை ஏனிந்த இருப்பு என்பது உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்!

ஒரு நிலையில் நின்றுகொண்டு காரணந்தேடின் அந்நிலைக்கு பதில்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதை தற்செயல் விளைவாகக்கொள்ளலாம், ஆனால், நாம் நிற்குமிடம் எல்லாவற்றுக்கும் மேலேயென்றிருந்தால் அனைத்து நிகழ்வுகளும் காரணகாரியத்தைச்சார்ந்தவையாகிவிடும் அல்லது அப்படியாகத்தோன்றக்கூடச் செய்யலாம், அல்லது ஒற்றையடிப்பாதையில் நான் மிதிக்கும் அந்த புல்லுக்கு காலையில் நீர்கிடைத்திருக்குமா என்பதிலிருந்து என் துன்பம் தொடங்கிவிடும் .

ஆழமான பக்தியோகத்திலும் கடவுளையும் கடந்துபோகவே வழிப்படுத்துகிறார்கள். கேள்விகள் கேட்காமல் ஞானயோகம் துவங்காதென்பதிலிருந்தே நாத்திகத்தின் ஆணிவேர் அங்கிருந்து உடனேக் கிளைக்கும். ஆக, ஏதோவொரு நம்பிக்கைபோல் தெரிந்திருக்கும் விசயங்களே மற்றொருஏதோவொரு நம்பிக்கையினின்று அகலச்செய்வனவாகவாகத்தானிருக்கிறது. அப்படியானால், நம்பிக்கையென்பது அன்றைக்கானத் துன்பத்தினின்று மேலேறுவதற்காக போலத்தான் தெரிகிறது.

கவித்துவம், அறிவு எல்லாம் அவ்வகையைச்சார்ந்தவைபோலத்தான் தோன்றுகிறது. அதாவது, என்னுடைய வலிக்கானக் காரணம், மூளையின் உணர்வுவாய்க்காலில் உண்டாகும் மின்னழுத்தவேறுபாடோ அல்லது வேதிவினையோதான் என்பதுத் தெரிந்தப்பின்னரும் எனக்கு வலித்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் முதன்முதலில் நான் அதை அறியும்போது, வலியில் மாற்றம் இல்லாது இல்லை, அதே விசயம், நன்கு பரிட்சயம் ஆனப்பின்னர், அதன் அறிவு எனக்கு துணைபுரிவதில்லை. ஆக, துன்பமானத்தருணத்தில் நம்பிக்கைசார் அந்த அறிவால் நாம் நம்மை சற்று ஏமாற்றிக்கொள்வதுபோல் இருக்கிறது, அதற்கான ஆணிவேரின் ஞானம் கேட்பதோடு நிற்கவில்லையெனினும், இருப்பில் இருந்து / சாதாரண வாழ்க்கைமுறையிலிருந்தே பெறுவதைப்போலத்தான் ஆதிசங்கரர், நாகார்ச்சுனர், தர்மகீர்த்திப் போன்றோரும் கூறுகிறார்கள்.

== “உங்கள் பின்னூட்டத்தின் கருத்துச் செறிவு அடர்த்தியாகவும் ஆழமாகவும் இருக்கிறது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துச் சிந்தித்தால் தான் முறையாக என்னால் உள்வாங்க முடியும் போலிருக்கிறது 🙂
ஆழத்தை அறிந்துகொள்ள முடிந்தால், ‘அன்றைக்கான துன்பம்’ என்னும் ஒன்று இல்லாமல் போய்விடும் அல்லவா?

ஆம் ஆம் அதேதான்! அறிவானது வலிக்கு மாத்திரை செய்கிறது; மருத்துவம் பார்க்கிறது; அது சைபோர்க்/cyborg மாதிரியோ குருத்தணுக்கள்/stem cells dynamics மாதிரியோ எனவளர்ந்துகொண்டே சென்றாலும், அன்றைக்கானத்துன்பத்தைத்தீர்க்கும் அளவிலேயே நிற்கவேண்டியிருக்கிறது, ஆய்வாளர்கட்கு இதை ஒத்துக்கொள்ளவொப்பாது என்பது ஒரு விசயமானாலும், அவர்களின் தீர்க்கதரிசன- நீண்டகால ஆய்வுத்திட்டங்களுங்கூட, அன்றன்றைக்கான அல்லது பின்னாளில் ஒருநாளுக்கான விசயத்தின் தீர்வாகவேயிருக்கிறது. ஆனால், நாம் நினைப்பதும் வேலைசெய்வதும் நம்பிக்கையுடன் இருப்பதும், ஒரே நொடியில் என் துன்பங்களை அகற்றமுடியுமா என்பதை எட்டுவதற்காகத்தான், ஆனால் இந்த ஆசையை இரகசியமாகவே வைத்துக்கொள்கிறோமெனத் தோன்றுகிறது.   ஏனெனில் ஒருநொடியில் வலிநிவாரணியென்பது எல்லாநேரத்திலும் சாத்தியப்படுவதில்லை, இந்தமாதிரியானமருத்துவப் புள்ளியியல் இடர்களால், உடனடிநிவாரணம் உண்டு என்றுகூறுவதற்கு அஞ்சவேண்டிவருகிறது.  ஆக நம் புள்ளியியல் அறிவு இதை ஒத்துக்கொள்வதுமில்லை மனமொப்புவதுமில்லை, பெரும்பாலும்!  ஆனால், இது பொதுவான அறிவு, நமக்குநாமே நாம் அவ்வளவு நம்பிக்கையுடன் (பகுத்தறிவுடனும்) இருக்கிறோமா?

ஒரு எடுத்துக்காட்டு, நமக்காக ஒருவர் எல்லாவேலையையும் செய்கிறார் எனவைத்துக்கொள்வோம், நமக்கு எதையுமே செய்யவேண்டிய அவசியமேயில்லையென்ற நிலையில் இருந்தால், நாம் அந்நிலையை ஒத்துக்கொள்வோமா?! கேட்கும்போது இனிமையாகத்தோன்றினாலும், நாம் கர்த்தத்துவம் என்றவொன்றுக்காகவே ஏங்கிக்கொண்டிருக்கிறோம்!  இதில் இன்னொரு சிக்கலென்னனவென்றால், நமக்கு அந்த கர்த்தத்துவம் என்பது, சாதாரணமாய் கிடைத்தாலும் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறோம், ஒரு துன்பம் வந்து, அது நம்மை துவைத்துக்காயப்பட்டப் பின்னர், மீண்டெழுந்து அதைக் கைப்பற்றவேண்டும் என்ற மனனிலையேப் பெரும்பாலும் இருப்பதுபோலும் தெரிகிறது.

மிக எளிமையான “வெற்றிக்கான முதற்படிதோல்வி” என்பதாகட்டும், ஆழ்ந்த புத்தரின் ஞானத்தையறிவதாகட்டும், இம்மனனிலையிலேயேதான் நாம் இருப்பதுபோலும் தெரிகிறது, இம்மனனிலை மிகவும் ஆச்சரியமானவொன்றல்லவா?!  நமக்குவேண்டியதொன்று, ஆனால், நாம் விருப்பப்படுவது முற்றிலும் எதிரானவொன்றைப்பெற்று அதில் சாதித்து நமக்குவேண்டியதை அடைவதுபோன்ற மனனிலை.

பெரும்பாலும், ஆழ்ந்த அறிவையெட்டிப்பிடிக்க முயலும்போது, சொந்தபந்தங்கள் காலைப்பிடித்து இழுப்பதை மனம் உடனே ஒத்துக்கொள்ளும் என்றால், நம்முடைய சொந்த அறிவும் அதைத்தடுத்து, எட்டவிடுவதில்லையென்பது நகைமுரண்,, அதை எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்றும் அறிந்துகொண்டால் சிறப்பாயிருக்கும்.

இன்னொரு எடுத்துக்காட்டாக, ஒருவேளை, எதோவொரு விசயத்தில் அதிசயத்தை எதிர்பார்க்கிறோமெனில், அதிசயம் நடந்தபின்னரும், நிசமாவா என்று புத்தி தீவிரமாகத் தெரிந்துகொள்ளமுயலும். ஒருவேளை என்னால் அதிசயத்தைக் கண்டுகொண்டே, அதிசயத்தின் காரணத்துக்கான (நாமறியாத ஒரு) பரிமாணத்தைப் புரிந்துகொள்ளமுடிவதற்கு என்னுடைய மூளையை அனுமதித்தால் மட்டுமே அதையெட்டமுடியும், அதற்கு நாம் கற்றவற்றை சற்று மறக்கவேண்டியிருக்கிறது, உதாரணத்துக்கு மந்திரத்தில் மாங்காய் விளையாது, காரணகாரியமில்லாத (அது உண்மையில் நாம் அறியமுடியாத) தற்செயல்விளைவுகள் என்பதுபோன்றவை.

ஆக அன்றையத்துன்பத்தைத்தாண்டி நாம் யோசிக்கிறோம் என்பதும், ஒரு நம்பிக்கை போலத்தானேயிருக்கும்,  ஏனெனில் நம்முடைய சொந்த அறிவே நம்மைத்தடுக்கிறது எனப் பார்த்தோம், மேலும் நமக்கு சுதந்திரமானப் பார்வையுண்டு என்று நம்புவதும் சற்றுயோசிக்கவேண்டியிருக்கிறது,  சமீபத்தைய ஆய்வொன்றில் பூனையினங்கள் தான்தோன்றித்தனமாய் இருப்பதற்கு காரணம் குறிப்பிட்ட வைரஸ்கள் எனக் குறிப்பிடப்படுகிறது,  மேலும் சில உளவியல் ஆய்வுகள் (மருத்துவப்புள்ளியியலையும் இதில் கணக்கில் கொள்ளவேண்டும்!) பூனையை வளர்ப்பவர்கள் சமூகவிலங்காக இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு எனக் கூறுகிறது.  பூனையைப் போலவேப் பூனைப்பிரியர்களூம் இருப்பதற்கு காரணம், அதே வைரஸாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.   இதில் நான் என்பது உண்மையில் அவரா, அல்லது அந்த வைரஸின் பின்னூட்டமா?!

சராசரி மனிதரின் நிலையிலேயே  மறந்தும் நினைத்தும் சிந்தித்தும் சிந்திக்காமலும் இருந்தால் எப்படியிருக்கும்?! பார்க்க கொஞ்சம் கிறுக்கு சாமியார் போலத் தெரியுமென நினைக்கிறேன். அதனாலேயே, இப்படிக்குறிப்பிட்டேன், அடியாழம் எட்டியபின்னர் இருப்பு என்பதே உப்புசப்பில்லா விசயமாகக்கூட இருக்கலாம்.

நாகார்ச்சுனர் அவருடைய மூலமத்யமககாரிகாவில் இப்படி வினவுகிறார், வெறுமையைப்/emptiness பற்றிப்பேசும்போது, ஒன்றுமில்லாததிலிருந்து எப்படி ஒரு பொருள் தோன்றியிருக்கும், அப்படியானால், பொருட்களுங்கூட ஒன்றுமில்லாதவையா?! இதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு இயற்பியல் ஞானம் உதவியதென்றாலும், இதையெழுதுவதற்கு பொருட்களை ஒன்றுமில்லாதவகையாக யோசிப்பதற்கு, பொருள் அல்லது பொருளின் தன்மையென்றால் இன்னதுதான் என்ற அடிப்படைஞானத்தை நான் மறந்தால் மட்டுமே இப்படியோசித்திருக்க முடியும்.

மன்னிக்கவும் அண்ணன், நான்குவரிகளில் முடித்துவிடவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன், மீண்டும் பெரிதாகிவிட்டது. ஆனால், தங்களுடைய இருவரின் அறிவார்ந்த உரையாடலையும் அங்கில்லாமல் தவறவிட்டுவிட்டேனேயென்று நேற்று இப்பதிவைப்பார்த்ததும் யோசித்தேன், அப்படி நினைத்ததிலேயே பேச்சு வளர்ந்துவிட்டது என நினைக்கிறேன். தங்களிருவரின்/மற்ற தத்துவவியலாளர்கள் கருத்துக்களையும் அறிய விழைகிறேன்!

மதுரை, மதுரம்! மதுரம்!!

 அண்மையில், அவசர காரியமாக சில வாரங்களுக்கு பாரதத்திற்கு போய் வர நேர்ந்தது!

காய்கின்ற வெயில்தனில், ஆங்காங்கே தண்ணீர்பந்தலும் மோர் பந்தலும் அமைத்து சித்திரை தாகம் தணிக்கும் மதுரையில் மனிதம், அறிவியல், பூமி என எல்லாவற்றையும் யோசிக்கும் சிலரை சந்திக்க நேர்ந்த அனுவங்கள்!

சில வாரங்களில், பல புதியவர்களையும் உயரிய மனிதர்களையும் சந்திக்க முடிந்தது. என் தம்பியார் Muthukumar Natarajan குமரன், மிக சாதாரணமாகக் கூட்டிக் கொண்டு போய் சேர்த்தது பாரி V Perianan Elayapari அண்ணனிடம்… டோமினோ விளைவுகள் போல் வரிசையாக, உயிர் தொழிநுட்ப விஞ்ஞானத்தோடு சமூக வேலைகளையும் பார்க்கும் சங்கர் Sankar Aakam அண்ணனையும், அவரைத் தொடர்ந்து, தந்தை வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டே அறிவியல் ஆய்வுகள் செய்யும் கோட்பாட்டு உயிரியலாளரான (Theoretical Biologist) Karthikeyan Ramanujam மெய்ஞான வழிகாட்டிகளையும் அவர் வழிசெல்வோர்களையும் இன்னும் பிற சமூகப் பற்றாளர்களையும் ஊருக்கு உழைப்பவர்களையும் காண நேர்ந்தது.

மிகக் குறைவான நாட்களேயிருந்தாலும் திடீர்திடீரென ஆட்களை நினைத்த நேரத்தில் சந்திக்க வைத்தவர் நம் இளையபாரி அண்ணன்.. இன்றைக்கு, அவரைப் பற்றி சில மாதங்களுக்கு முன் வந்த காணொலியைக் காண நேர்ந்தது, அதன் விளைவாய் இச்சிறு குறிப்பு.. மேலும் இக்காணொலி சமூகப் பொறுப்பாளர்களாக அவர்கள் செய்யும் விசயங்கள் பலருக்கு விருப்பமானதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவனவாகவும் வழிகாட்டியாகவும் அமையலாம்..

சங்கர் அண்ணனின் “பைந்தமிழ் மதுரை” நிகழ்ச்சிக்கு செல்லமுடியவில்லை, இருப்பினும் சில மணிநேர சந்திப்பில் நிறைய விசயங்களைப் பேச முடிந்தது. தன்னார்வராக, மதுரை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதையும் துளிர் வட்டாரத்தின் மூலமும் மற்ற அமைப்புகளின் வழியாகவும் சிறுவர்களுக்கான அறிவியல் விசயங்களைச் செய்து வருவதையும் அறிய முடிந்தது.

இவர்களுடன் மதுரை பல்கலையில் போய் கிராமப்புற மாணாக்கர்களுக்கு அறிவியல் ஆய்வு செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என முனைந்து மதுரையிலேயே இருக்கும் பேராசிரியர்  Muruga Poopathi Raja, முருக பூபதி இராஜா அவர்களையும் காண நேர்ந்தது! சமீபத்தில் அவர்களின் அல்சைமர் நோயினைச் சார்ந்த ஆய்வுகள் தேசிய நாளிதழ்களிலும் மற்றும் உலகளாவிய அறிவியல் பத்திரிகைகளிலும் பாடப்பட்டன! (dx.doi.org/10.1016/j.celrep.2016.01.076) அறிவியல் ஆய்வில் சிறந்த ஆய்வாளர்களைக் கொண்டிருந்தாலும் அதற்குரிய சூழ்நிலை பெரிதாக இல்லாத போதும், அதில் இருந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கி பரிமளித்து வருபவர்கள் இராஜா அண்ணன்! நேற்று அவரின் மற்றொரு, பொதுமக்களுக்காக எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரையினையும் பகிர்ந்திருந்தார்கள்! http://www.spincotech.com/ebook/may2016/

ஆயினும் சென்னையில் இருக்கும் என்னுடைய உற்றத் தோழர்களும் ஆழ்ந்தத் தேடுதல் வேட்கை கொண்வர்களுமான தேவா Devaraj Ns, இராகுல் Rahul Ravindran,   ஜீவா Jeeva Malini ஆகிய நண்பர்களைக் காண முடியாமல் வரநேர்ந்தது. மன்னிப்பார்களாகுக..

தேசபக்தி யாதெனில்..? – ஆட்டக் கோட்பாட்டின் வழியாக. (Nationalism and Game theory)

பாரத ஆத்தாளே நீ வாழ்க! — தேசத் துரோகம்,
பாரத் மாதா கீ ஜே — தேச பக்தி..

இப்படித் தான் போகிறது, இந்திய தேசியம் பேசுபவர்களின் கருத்துகள். மேலிருக்கும் சொற்றொடரில் உள்ள ஒரே பொருள் கொண்ட விசயங்களில் இரு வேறு நிலைப்பாடுகளின் மீநிலைப்பாடே இக்கட்டுரையின் போக்கு.  இச்சொற்றொடரில் இரு கருத்துகளுண்டு.

ஒன்று மக்களின் சொந்த மொழியை வெறுக்கவோ அல்லது முக்கியத்துவத்தை இழக்கவோ செய்வது போல் செய்வது

இரண்டாவது, தேசபக்தர்கள் கூறுவதையே மற்ற தரப்பினர்,  தத்தம் வழியிலோ மொழியிலோக் கூறுவதை தேசபக்தர்கள் எதிர்ப்பது.  சாதி மத மொழி இன வேறுபாட்டைக் கொண்டிருக்கும் போழ்து, நாட்டின் முன்னேற்றத்திற்காகாது என்பதை இரு வகுப்பினரும் கூறத் தான் செய்கிறோம். ஆயினும் அவர்கள் அதை வைத்து வேறொரு குழப்பமான அரசியலை முன்னெடுக்கும் பொழுது, அதில் துவேசம், வெறுப்பு, அரசியல் என மற்றையவரின் மீது சேறுவாரித் தூற்றுகின்றனர்.  இவ்விருக் கருத்துகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் வியப்புக்குரியது, இவ்விரண்டும் கல்வி சாலைகளில் நிகழ்வது ஆச்சரியகரமாணது அல்லவா!  வடமொழித்திணிப்பு, ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத் பல்கலைக் கழகங்களைப் பற்றிய கருத்துகளும் அவை கையாளப்படும் விதங்களூம் இரண்டாம் வகையினது.

உணர்ச்சி பொங்க சமக்கிருதத்திலேயோ இந்தியிலேயேக் கத்தினாலேயே தேசபக்தி என்பது படுமுட்டாள்த் தனமானது இல்லையா.  அது பற்றி சிலக் கட்டுரைகளில் விவாதித்திருந்தேன் [1, 2].

மேம்போக்காய் உலகம் முழுவதும் ஒரு மாதிரியான தன்னலம் எனும் தீவிரவாதம் தலைதூக்குகிறது போல் ஒரு மாயை உண்டாகிறது, இது கிட்டத்தட்ட, நாம் படிக்கும் போது, வகுப்பில் ஆசிரியர்கள் போன வருடம் இருந்த மாணவர்கள் தங்கம் என ஒவ்வொரு வருட மாணவர்களிடமும் கூறுவது போலானது.  சரியாக உற்றுக் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே மனிதர்கள் ஒரு மாதிரியான ஆக்கிரமிப்பைப் பண்ணியுவர்கள், நியாண்டர்தால் மனிதர்களுடன் கூடிக் கெடுத்ததாய் கூட சில மாதங்கள் முன்னால் வந்த ஆய்வில், உயிரி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மனிதர்கள் ஒரே விசயத்துக்கு வெவ்வேறு காலதேச வர்த்தமானங்களில் வேறுபடுவது ஒன்றும் தவறில்லை.  ஆயினும், பேசப்படுபொருள் ஒன்றாயிருக்குங்கால், அதன் கருத்தின் பொருட்டு எதிரெதிர் கருத்துகள் கொண்டிருந்தாலும் கூடியிருத்தல் நலம்! இதன் மூலம் பல விசயங்களை சரிசெய்ய முடியும்.  இவை புரிந்தும் புரியாதது போல் கையாளப்படுகின்றனவா என விளங்கவில்லை.  பல்கலைகளில் அரசியல் பேசவேக் கூடாது என்று ஒரு கூட்டம் கிளம்பியிருப்பது எதன் பொருட்டு எனவிளங்கவும் இல்லை.  முரண்படுதலும் கூடுதலும் ஆட்டக் கோட்பாட்டின் (Game theory) படி நல்ல வளர்ச்சியான சமூகம் அமைக்க வழிகுக்கும் எனப் பல சமூக சோதனைகளில், சமூக இயற்பியலாளர்களாலும், கணிதவியலாளர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.  இரு பக்கமும் வெற்றிகளை விளக்கும் நாஷ் சமநிலையிலும் (Nash Equilibrium) கூட இரு பக்கத்திலும் உள்ள சாதகபாதக நிலைகளைக் எடுத்து சீர்தூக்கி அமைப்பதே ஆகும்.   உதாரணமாக, தற்பொழுது உள்ள சமூகத்தைக் கூட சில நிலைப்பாடுகளை வைத்து மேம்போக்காகப் பிரிக்கலாம்.

1:  இரு புறத்திலும் நன்மையே இருக்க.
2:  இரு புறத்திலும் குறைகளையேக் காண.
3, 4:  இருபக்கத்திலும் உள்ள சாதக பாதகங்களை எடுத்தியம்புதல்.

சத்திய யுக நிகழ்வாக முதலாம் நிலைப்பாட்டை, பெரும்பாலும் யாரும் கலியுகத்தில், யோசிப்பதேயில்லை என்பது வருத்தத்திற்குரியது.  யாரையாவது யாராவது ஒத்துக் கொள்ளும் தன்மை, அப்பனாத்தாளானாலும் பிள்ளையரானாலும் எவரிடமும் இருப்பதேயில்லை.  பெரும்பாலானோர் இரண்டாவதையே தத்தமது நிலையாகக் கொள்கின்றனர், பொது வாழ்வில் “எங்ககிட்டயேவா?” என எக்காளம் பேசுவோர், “அடுத்தவனிடம் நீ எப்பொழுதும் சீப்படுவாய்” என ஜோசியக்காரர் கூறும் போது “ஆமாஞ் சாமி, கரேட்டு” என்பது மாதிரி, அவர்களுக்கே அவர்களைப் பற்றி சந்தேகம் இருப்பதால் எல்லாரிடமும் குறைகளைக் காண முடிகிறவர்கள்.  3, 4 ஆவது நிலைகளைக் கொண்டவர்கள் யாராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், இம்மாதிரியானவர்கள் ஆல்ஃபா விலங்குகளாக இல்லாமல், சமூகத்தை சிறிது சிறிதாக நேர் செய்யக் கூடிய ஆல்ஃபா விலங்குகள்.  சில விலங்குகள், ஆல்ஃபாத்தனம் கொண்ட சண்டியர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதும் ஓர் அதிசயமான சங்கதி! இருக்கட்டும்!

இப்படி படிநிலைகள் மிகவும் எளிமையானது, ஆனால், நாம் எங்கிருக்கிறோம் என்றே நிறையப் பேருக்கு விளங்கவில்லை அல்லது, விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.  எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் என்ன ஆகும்?  சமூகம் வளராது அல்லது அழியும்,   அதுவும் இரண்டாவது நிலைப்பாட்டின் pay-off – அந்நிலைப்பாட்டிற்கான விலை –  மிகவும் கொடுமையாக இருக்கும். உதாரணத்திற்கு ஹிட்லரின் தத்துவங்கள், சர்வாதிகாரியின் கீழுள்ள தேசத்தில் மக்களின் நிலை.  மாற்றுக்கருத்து இருக்கும் போது, ஒன்றைத் தொட்டு ஒன்றைப் பிடித்து சமூகம் வளரும், எடுத்துக்காட்டு, மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகள்.  மக்களின் போக்குக்கேற்ப மாறும் ஸ்காண்டிநேவிய நாடுகள்.

சரி நம் நாட்டிற்கு வருவோம், கல்விச்சாலைகள் அரசியல் பேசுவதற்குரியது இல்லையெனக் கூறுபவர்களின் தன்மை எத்தகையது?   பெரும்பாலானோர் ஆள்வோர் சார்ந்து பேசுவோர். அல்லது 2வது நிலைப்பாடான எதிலும் குற்றம் காண்பவர்.

ஆள்வோரை ஆதரிப்போராய் இருந்தாலும் குறைகளைக் காண்போராய் இருந்தாலும் சரி,  பழம்பெருமைப் பேசுவதே பிடித்திருக்கிறது, பெரும்பாலானோர்க்கும்,  உலகத்தின் மிகவும் பழையப் பல்கலைகளான, தக்கசீலமும், நாளந்தாவும்  வெறும் வேதத்தைப் பற்றி மட்டுமாப் பேசின,   அரசியல், போர்முறைப் பற்றியும் பேசின.  குறளும் சாணக்கியமும் அரசன் செய்யவேண்டியன பற்றி பேசினவும் கூட அதன் தாக்கத்தினாலேயே தானே.  தத்துவங்கள் ஊடாக அக்காலத்திற்கேற்ற வகையில் அறிவியலும் பேசப்பட்டது.

ஆனால், இப்படிப் போகும் விவாதமானது, எல்லாவற்றிலும் குறைகளைக் காணும்படிக்கு எல்லாநிலைகளிலும் மாற்றிக் கொண்டே வருவதையும் காண முடிகிறது.

  • பொய்யான காணொலிகள் அதை வைத்து விவாதங்கள்
  • மாணவர்களை தீவிரவாதிகள் அல்லது தேசத் துரோகிகள் என்பது,
  • பல்கலைக் கழகங்கள் மூடப்பட வேண்டும் என்பது
  • சமூக விவாதக் குழுக்கள் மூடப்படவேண்டும் என்பது
  • ஒரு மாணவனின் இறப்புக்கு உலகவே வருத்தம் தெரிவிக்கும் போது, “நான் அங்கிருக்கிறேன்இங்கிருக்கிறேன்” என ட்வீட் போட்டுவிட்டு, நாட்கள் கழித்து வருத்தம் தெரிவிப்பது.
  • இதில் ஒரு பெண்ணை சுடச்சொல்வது தேசபக்தி; சாதியப் பிரச்சினைகளைப் பேசுவது தேசத்துரோகம்
  • இவ்வளவு பிரச்சினைகளுக்கப்புறம் நேற்றே வாயைத் திறந்தது
  • நடக்கும் எல்லாவற்றையும் தேசியத்தின் பேரில் சேர்ப்பது.

அதற்கு ஆதரவுகள் வேறு.

சரி, அதன் பின்னால் இருக்கும் நியாயங்கள் எவ்வகையானது எனக் காண்போம்.

பள்ளியிலும் கல்லூரியிலும் கண்களை மூடிக் கொண்டு இருந்துவிட்டு, திடீரென ஒரு நாள் கண்விழித்து வாக்களித்துவிட்டுத் திரும்பவும் கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என நினைப்பது எத்தகையது??  என் தந்தையார் பெரிதாக அரசியல் நாட்டம் இல்லாதவர்கள், ஆனால் அவர்களே என்னை குறைந்தபட்சம் தேநீர்க் கடை அரசியலாவது பேசவேண்டும், தேநீர் கடைக்குப் போய் செய்தித்தாள்களைப் படித்து அவர்கள் பேசுவதையாவதுக் கவனி என்பவர்கள்.  ஆனால், எனக்கு அடிப்படையேப் புரியாததால், திருவள்ளுவம், பிளேட்டோ, சாக்ரடீஸ் எனச் சுற்றிக் கொண்டிருந்தேன், இருக்கிறேன்.  என் தந்தையையும், தம் குழந்தைகள் அரசியல் பேசக்கூடாது என குதிக்கும் பெற்றோரையும் ஒப்பிடும் போது எனக்கு என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை.  அதுவும் நாட்டின் அரசியலையும் பிற நாட்டு அரசியல், பிறநாடுகளுடனான உறவைப் பற்றியும் அலசி ஆராய்ந்து, அதற்கான கொள்கைகளை வரையறுக்கும் பல்கலைக்கழகத்தில்..  இவர்களுக்கெல்லாம், என்ன பேசுகிறோம் என விளங்கவாவது செய்கிறதா எனத் தெரியவில்லை.

அக்காலத்தில் அவர்கள் பேசிய அளவே அறிவியலும் பேசப்படவேண்டும் என நினைப்பதும், கொடுக்கும் காசை வைத்து கொஞ்ச காசில் நிறைய அறிவியல் செய்யலாம் எனக் கூறும் அமைச்சரைக் கொண்டாடுவதற்கு பதில் தலையை வடக்குப் பக்கம் வைத்து தினமும் படுக்கலாம்.   இந்தம்மாள் தான், கொஞ்ச நாளை முன்னர் ஐஐடி மாணவர்கள் ஏன் வெளிநாடு செல்கிறார்கள், அவர்களுக்குரிய மானியக் கணக்கு என்று பிதற்றியவர்.  இப்படி செய்தால், இன்னும் அறிவியலை வெறியுடன் செய்வோர் வெளிநாட்டை நோக்கி வரத்தானே செய்வார்கள்.  இதில் இவர்கள் சீனாவுடன் போட்டியிடச் சொல்கிறார்கள்.  ஒரு மானியக்குழுவைக் காட்டிக் காக்க துப்பில்லாத அரசும் அதன் இயந்திரங்களூம் விஞ்ஞானிகளை கைநீட்டுவதற்கு முன், இது சரியானவழியா எனக் கேட்டுக் கொள்ளுங்கள்! சரி, போதும்!

மக்களின் கைவரை இணையம் வளர்ந்திருக்கும் இவ்வேளையில்,  பல்கலைக் கழகத்தில் கூட அரசியல் கூடாது என்றும் நாங்கள் சொல்லும் அளவுக்கு. கொஞ்சமே கொஞ்சமான அறிவியல் போதுமென்றும்,  பொதுமக்களை சிந்திக்கச் சொல்லும் சிந்திக்க வைக்கும் அரசு, அடுத்து அது செய்யும் எல்லாவற்றையும் சரியென சொல்ல வைக்க நிறைய நாட்களாகாது.   Make in India எனக் கூறும் அதே நேரம், உள்ளூர் கடைகளை மூடியும், அறிவியலுக்கானப் பாதையைக் குறுக்கியும், மக்களை எப்பொழுதும் பயனர்களாகவும் கண்டுபிடிக்கும் திறனை முடக்கியும், இயந்திரங்கள் போல் ஆக்கவும் முயல்கின்றன.  விளம்பரப்படுத்துவது ஒன்று, நடப்பது அதற்கு நேரெதிர்.  ஆயினும் சமூகம், அரசின் பக்கம் வருமாறு ஊடகங்களின் அமைப்புகள்!  ஆக சமூகத்திற்கான pay-off ‘ஞே!’.

செர்மனியில் குழந்தைகளுக்கான அரசியல் செய்தி:

வெளிநாட்டுக் குழந்தைகள் கற்பது போல வேண்டும் என்பவர்கள் கவனிக்க.
செர்மனியில், குழந்தைகளுக்கான அரசியல் செய்திகள் என்று ஒன்று உண்டு.  என் தோழியினுடன் வேலைபார்க்கும் பேராசிரியையின் மகனுக்கு 9 வயதே ஆகிறது.  அவனுக்கு அரசியல் மிகவும் விருப்பம்!  சில வருடங்களுக்கு முன்னர் அவனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.  அவனுக்கு ஆங்கெலா மெர்க்கல் (Angela Merkel) சார்ந்த ஆளுங்கட்சியே (CDU) மிகவும் பிடித்தம், நாம் வேண்டுமென்றே, நம் செர்மனில், பெரிய எதிர்க்கட்சியான SPD (சோஷலிச)க் கட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய் எனக் கேட்டதற்கு, அவர்களின் கொள்கைகள் முட்டாள்தனமானது எனக் கூறினான். திரும்பவும் வேண்டுமென்றே எனக்கு SPD-யேப் பிடிக்கும் எனக் கூறியதற்கு, என்னை ஆழ்ந்துப் பார்த்துவிட்டு, அவனுக்கு ஏன் ஆளுங்கட்சிப் பிடிக்கும் என சில காரணங்களை அடுக்கினான்.   அதை அவன் தந்தையிடம் கூறிய போது, அவருக்கு மிகவும் அதிர்ச்சிகரமான மகிழ்ச்சி!  அவனுடைய சார்பைப் பற்றியும் பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதையும் அவர்கள் அவ்வளவு எதிர்பார்த்திருக்கவில்லை! சிறுவனுக்குரிய விசயங்கள் இருந்தாலும், அதன் தீவிரத்தை உணர்ந்திருந்தான்.

நான் கல்லூரியில் படித்தக் காலத்தில்,  சிறுவயதில் நான் படித்தப் பள்ளியிலேயே, கணிதம் சொல்லித்தர அழைக்கப்பட்டேன், அப்பொழுது சில கிராமத்துப் பெண் பிள்ளைகள், 10-வதுப் படிக்கும் போதே, அரசியல் நோக்கைக் கொண்டிருந்தனர், அவர்கள் இந்நேரம் அரசியலில் பெரிதாக ஆகியிருக்கலாம், அப்படியில்லாத பட்சத்தில், அடுத்த தலைமுறைக்குத் தேவையான படிப்பைத் தந்து கொண்டிருக்கலாம்.  அரசியல் வேண்டாம் என்று சொல்லுபவர்கள், பெரும்பாலும் நம்மூரில் தம் பிள்ளைகள் வளர்ந்து வெளிநாடுகளுக்குப் போய் இருக்கட்டும் என நினைப்பதால் தான், அரசியல் பேசக் கூடாது என்கிறார்களா எனத் தெரியவில்லை.   தாம் வாழும் சமூகத்தைப் பற்றி விமர்சிப்பது என்பது, சமூக ஓட்டத்தைத் தாண்டியும் அச்சமூகம் நன்றாக இருக்க முடியும் என்று நினைத்தும், மேலும் சிந்தனைகளால் மாற்றம் எப்படியாகப்பட்டதாக இருக்க வேண்டும் என யோசித்தாலும் தான் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படை அறிவினாலேயே விவாதிக்கிறார்கள்.  ஆனால், தேசத்தின் வளர்ச்சியைப் பற்றி யோசிப்பவர்களைத் தடுப்பவர்கள் தேசபக்தர்களாகின்றனர். செய்பவர்கள் தேசத்துரோகிகள் ஆவது வினோதமான விசயம் அல்லவா.

சரி இதில் மிதவாதம் பேசுபவர்களின் (பேசுவதாக நினைப்பவர்களின்) நோக்கு எப்படியானது?

கைது செய்யப்பட்ட மாணாக்கர்கள், ஆய்வாளர்கள் அவர்களின் கல்விநலனையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு வெளிவிடுதல் நலம் என்கிறார்கள்.  மேலும், ஏதோ இதற்கு முன்னர் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் விவாதங்களே நடக்காத மாதிரி, தற்பொழுது தான் இவையெல்லாம் நடக்கின்றன என்பது போலும் மக்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளது, மிகவும் ஆபத்தானது.   அரசைக் காட்டமாக எதிர்ப்பதில் ஏற்படும் சுணக்கம்.

ஆனால் அது கல்வி நலனை மட்டும் கொண்டு செய்வது என்ற சிந்தனையில் பெரிய ஓட்டை உள்ளது.  அதுவும் நல்ல வழியாகத் தெரியவில்லை.  ஆளும் ஆட்சியர்களுக்கெதிரான ஒரு விசயத்தை முன்வைக்க கல்விச் சமூகத்துக்கும் உரிமை உண்டு.  மொண்ணையானக் கல்வியை வழங்கும் கல்விநிறுவனங்களைக் கேள்விகேட்கவோ, அதன் அதிகப்படியானக் கட்டணக் கொள்கைகள் அதன் தரம் பற்றிய கொள்கைகள் மீது கைவைக்கவோ வக்கில்லாதவர்கள்,  ஐஐடி மத்தியப் பல்கலைக் கழகக் கல்விநிறுவனங்களின் சுயசிந்தனையைத் தூண்டும் சூழ்நிலைகளில்  கைவைக்கத் துணிகிறார்கள்.   சோறு போட்டால் செஞ்சோற்றுக் கடனைச் செய் என்பது போல் உள்ளது, இந்நிலைப்பாடு.

எங்கெங்கும் புரட்சி நடக்கப் போகிறதென்றால், முதலில் ஆள்வோர்கள் கைவைப்பது, பல்கலைக்கழகங்கள் தான் என்கிறது வரலாறு!  அது சீன பர்மிய கிரேக்க இலங்கை ருஷ்ய அடக்குமுறை இப்படி எந்த நாட்டுப் பிரச்சினையானாலும் அதைக் காண முடியும்.  தேசியவாதிகளானாலும் இடதுசாரியானாலும் முதலில் சொல்வது, “இதை நாட்டுக்காகத் தான் சொல்கிறோம், அதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையென்பதேயன்றி வேறு கிடையாது,  அதனால் பல்கலைக் கழகங்களை மூடுகிறோம்” என்பர்.  நன்றாக கவனித்தால், அதே போல சமூகத்தில் நிகழ்வதும், நம் கல்விக்கூடங்களும் அவ்வழியில் சேரும் அபாயம் இருக்கிறது.     நாட்டின் ஒழுங்குமுறையில் முனைப்புக் காட்டாமல், இப்படி இருக்கிறார்கள்.   நானும் என் பாரம்பரியத்தை மதிப்பவன் அதனாலேயே தான் கேள்விகளை எழுப்புகிறேன்.  இவர்களின் போக்கு சன்னியாசிகள் ஆனாலும் கோபம் கொள்ளச் செய்யும் என்றேத் தோன்றுகிறது.   சுற்றியுள்ள நாடுகள் கேள்விகேட்கும் போதும் ஹிட்லரும், கிம் ஜாம் உன்னும் உருவாகத் தான் முடிகிறது  அது இணையம் இல்லாதக் காலமானாலும், இணையமிருக்கும் காலாமானாலும். எப்படியானக் காலமானாலும்.

சிலரின் கருத்துகள், பல்கலைக்கழக விவாதங்களை ஆதரிக்கும் பேராசிரியர்களை உலகச் சமாதானம், தீவிரவாதச் சமாதானம் பேசச் செல்லுங்கள் எனக் கூறுகிறார்கள்.  இவர்கள் பல்கலைக்கழகங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றே விளங்கவில்லை.   வெளியுறவு, அரசியல் சார்ந்த முடிவுகளை ஆராய அதிகாரிகள் மட்டும் இருப்பார்கள் என நம்புவது மிகவும் மேலோட்டமான எண்ணம்,  எல்லோராலும் பாராட்டக்கூடிய வகையில் ஒரு எந்திரம் செய்வதற்கு அதன் பின்னால் உள்ளவர்களின் உழைப்பும் ஆய்வும் மிகவும் முக்கியமானது, ஆனால் அவை பற்றி பயனர் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதே போல் தான் இதுவும் எனத் தோன்றுகிறது.   வெளியுறவுக் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் பல்க்லைக் கழக அளவில் வெவ்வேறு விதங்களில் அலசப்பட்டும்  ஆராயப்பட்டும் பிரசுரிக்கப்படுகின்றன, அவை பெரும்பாலானத் தருணங்களில் இக்காலத்திற்கும் நடப்பு அரசியலிலும் தாக்கத்தை உண்டு பண்ண முடியும் எனக் கூறிவிட முடியாது, ஆயினும், எல்லா நேரமும் தாக்கத்தை உண்டு பண்ணாமலும் இருப்பதில்லை.  தாக்கம் இல்லாதிருத்தலுக்கானக் காரணங்களும் பல நிலைப்பட்டவை.   பின்னர் இது பற்றி விவாதிக்கலாம்.

நான் ஐஐடியில் படித்த போது, எனக்கு கற்றுக் கொடுத்த ஒரு குவாண்டம் இயற்பியல் பேராசிரியர்,  காஷ்மீர் விவாகாரத்தைப் பற்றி நம் நாடாளுமன்றத்தில் இருந்து, அமெரிக்க சபைகள் வரை பேசியவர், அதற்காகத் தொடர்ந்து கொலைமிரட்டல்களையும் பெறுபவர். ஆனால் அவர் கூட இப்படி முடக்கும் வேலைகளை ஆதரிப்பவர் இல்லை.  நாட்டை ஆதரியுங்கள், ஆனால் நடப்பவற்றையும் கண்கொண்டு வாளாவிருப்பது எவ்வகையிலும் நல்லதல்ல.   இப்படி சுயசிந்தனையை ஆதரிக்கும் ஆசிரியர்களை விட்டுவிட்டு, பிள்ளைகளுக்கு நூலில் இருக்கும் விசயங்களைக் கற்றுத் தரமட்டும் போதுமான ஆசிரியர்கள் வேண்டுமென்பதால் தான், சமூகத்தில் கல்விச்சீரழிவும் பின்பு நாமே அதைக் குறை சொல்வதும் நிகழ்கிறது.   எல்லையில் நின்று போராடும் போர்வீரர் எவ்வளவு முக்கியமோ, அதே போல் விமர்சனத்தை நோக்கும் பக்குவமும் வேண்டும்.  வெறும் வலுவான எல்லையை வைத்துக் கொண்டு, உள்ளேக் குப்பையைக் கொட்டிக் கொண்டே இருந்தால் எப்படி?

ஆக, எல்லாநேரமும் கண்களை மூடிக் கொள்ளவேண்டும், அவர்களுக்கு வேண்டும் நேரம் மட்டும் கண்திறந்து பார்த்து அவர்களின் துயரம் போக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய தன்னலக் கருத்து?

குறைகளை மிகுதியாக்கிக் கொண்டே இன்னொரு பக்கம் எதற்கு ஆதரிக்கிறோம் எனத் தெளிவான ஆய்வுநோக்கில் கருத்துகளை விடாமல், உணர்ச்சிவசப்பட்டுக் கத்துவதன் சம்பளம் சாதிய மத இன வெடிகளை ஆயத்தப்படுத்தி குழப்பம் மிகுந்த நாடாக்குவதே ஆகும்.  வேண்டாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டால், நாடு என்பது யார் வாழ்வதற்கு?   இது மிக எளிதான விசயமாக ஆகிவிட்டால், உள்ளே இருக்கும் பிரச்சினைகள் பூதாகரமாய் ஆகும், வீட்டில் இருப்பவர்களின் பிரச்சினை கூட பெரிய சமூகப் போராட்டமாக வெளிவரும்,  நீதிமன்ற வளாகத்தில் மாணவர்களையும் பத்திரிகையாளர்களையும் அடித்தவர்கள் வெளிவந்துவிட்டார்கள், பொய்யானக் காணொலிகள், மாணவ தற்கொலை, விவசாயத் தற்கொலைகள் என்றாலும் அது எளியோர் பக்கமேப் பாதிப்பதும் அதற்கு மிகக் கேவலமாக, புதுப்பாணி என்பதும், மேலும் அதற்கு சரியான வழிக் காணாது, மாணவர்கள் காமுகர்கள் என்பதும் மிகவும் தரங்கெட்ட நிலையில் அரசின் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.

திரும்பவும் ஆட்டக்கோட்பாட்டு வழியிலான அனுமானம்

ஆக, மேலிருக்கும் விசயங்களை வைத்து உய்த்துணரும் போது,  சில ஆட்டக்கோட்பாட்டியலின் படி அனுமானிக்க முடிகிறது. அரசின் தற்போதைய காரியங்கள் பார்ப்பதற்கு சென்னின் தோற்றமுரண் (Amartya Sen’s Paradox) போல் அமைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு யோசிப்பவர்கள் லிபரல் மினிமலிசம் (சிலர் மட்டும் ஒரு விசயத்தை விரும்புவது) எனும் ஒரு நிலையில் இருந்து பேரட்டோ உவப்பு (எல்லோரும் ஒரே விதமான விசயத்தை விரும்புவதைப் போல் ஒரு மாயை உருவாக்குவது) என்பதை நோக்கிச் செலுத்துவது போல் உள்ளது.  மேலும் சமூகக் குழப்பத்திற்கான ஒரு விசயமாக எல்லோருக்கும் தன்னலமும் மற்றும் என்ன யோசிக்கிறோம் அல்லது பேசுகிறோம் எனத் தெரியாமலேயே நினைப்பதும் பேசுவதும் போல் அமைவது, பற்பல சிக்கல்களுக்கே இட்டுச் செல்லும்.

திரும்பவும் சொல்கிறேன்..  வாழ்க தமிழ்! வாழ்க பாரதம்!!  ஆனால், உங்களின் வழியிலல்ல… 2000 வருடம் முன்னர் இருந்த எதோவொரு அனுமானத்தில் ‘அந்த நல்ல வாழ்க்கை’ தான் வேண்டுமென்கிறீர்கள், ஆனால், இருப்பவர்களின் மத்தியில் பிரிவினையை உண்டு பண்ணவும்செய்கிறீர்கள்.  இதுவே தாங்கள் முரணுடன் செயல்படுகிறீர்கள் எனத் தெரியவில்லையா?!

உடன்படுவோர் எதிர்ப்போர் ஆட்டக் கோட்பாடுகளில் கருத்து கொண்டோர் விமர்சிக்கலாம்.  நன்றி!

முகநூல் அளவே ஆகுமாம் அறிவு?!- The philosofby :p

பொதுவெளியில்,  சகோதரர்களுக்கிடையே நடந்த உரையாடலின் தொகுப்பு  (drumming up an apologetic philosophical discussion supposed to be like “Man from Earth”,  ended up something charlatan!).

பின்னணி:  (பின்னணியும் பேசப்படுபொருளும் வேறு!) சில வருடங்களுக்கு முன்னர் எல்லோருடைய வாயிலும் அவலாய் ஆன நித்யானந்த சாமியார் ஒரு வெளிநாட்டுப் பெண்ணுடன் அமர்ந்திருப்பது போல் உள்ளப் படம்!  இருந்தாலும் அதைப் பற்றிய விமர்சனம் அல்ல!

கருத்தாள்வோர்:
நான்                         : ஒரு அஞ்ஞானி
ஒரு தம்பி                  : சமூக ஒழுக்கநிலை சார்ந்து
மற்றொரு தம்பி        : நல்லதையெடு -மற்றன விடு- சார்ந்து
என்வயதொத்தவன்  : மூத்தோர்சொல்-முதுநெல்லிக்கனி-சார்ந்து

பண்டையக் காலத்தின் அறிவு நவீன காலத்தின் சிந்தனை, எந்தவொன்றும் எது எப்படியிருக்கவேண்டும் என்றப் பார்வையை ஒரு பொதுப்படையானப் பார்வையிலும்,  கொஞ்சமே கொஞ்சம் அறிவியல், சமூக அறிவியலின் பார்வையிலும், மிக முக்கியமாக முகநூல் பிரசங்கங்களின் அறிவேப் பிரதானமாகவும் அமையும் பார்வையிலும் அமைந்தது.  வழக்கம் போல பல விசயங்களைக் கலந்துகட்டி அடித்த ஒரு வெகுசன அறியாமைப் பற்றியதொரு பதிவு!

நன்மைவிரும்பி: நல்லதையெடு -மற்றன விடு! ( கூறிவிட்டு சென்றுவிட்டார்!)

ஒழுக்கவாதி:  இது குழப்பத்தின் விளைவு 

அஞ்ஞானி  : ஏனெனில் எல்லோரும் தான் குழப்பத்தில் இருக்கிறோம். யாருக்கும் தெளிவான பதில் தெரியாது. அப்படித் தெரிவது போல் தோன்றும் அவ்வளவு தான்.

அடுத்தவனை என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என யாரும் கூற முடியாது. உன் கேள்வியை, சாமியார் எனில் இப்படித் தான் இருக்கவேண்டுமெனவும் பெண்ணைத் தொடவோ கூடவோக் கூடாது என்று யார் தீர்மானித்தது என மாற்றிக் கேட்டுக் கொள்.

பொதுவாகவும் நல்லது கெட்டது என எதைச் சொல்கிறார்கள் எனக் கேள். விடைக் கிடைக்கும் வழி கிடைக்கலாம், அதை விட்டுவிட்டு இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் கேட்டால், வர்ணாசிரமக் கோட்பாட்டை, இது தான் பாரம்பரியம் என்று பின்பற்றுபவர்களுக்கும், அதை விமர்சித்து உலகம் வளர்ந்துவிட்டது, அதெல்லாம் இப்போது செல்லாது எனக் கேள்வி கேட்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது.

யாரொடு சேர்கிறோம் என்பது முக்கியமில்லை. எதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஒழுக்கவாதி:  மனிதர் உருவாக்கிய விதிமுறைகள் ஆனாலும், சராசரி மனிதர் என்பவர் வேறு, சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவரின் நிலை வேறு.  வேதங்களை இம்மாதிரியானவர்கள் மதிப்பதில்லையா! வேதங்கள் தவறா அல்லது இவர்கள் தவறா?  பொதுவாழ்வில் ஒழுக்கம் தவறுவோரை விமர்சிக்கும் உரிமையுண்டு!  (வேதங்கள் ஒழுக்கங்களைப் போதிக்கும் என்பது இவரின் நம்பிக்கை!)

அஞ்ஞானி:  சில விசயங்களை (எல்லாவற்றிலும் அல்ல!) நீ தெளிவாகத் தான் கேட்டிருக்கிறாய், ஆனால், இன்னும் உன் சித்தாந்தத்தில் இருந்து தான் யோசிக்கிறாய். அதில் ஒன்றும் தப்பில்லை, எனினும் அறிவுக்கு அது போதாது. பொது வெளியில் ஒருவரைக் குறை கூறுவது என்பது நாகரீகத்தையும் வசதியையும், அதனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்வதையும் சார்ந்தது. அதை நீ தான் முடிவு செய்யவேண்டும்! வேலைசெய்யாத அரசையும், கல்வித்துறையையும் ஆய்வுத்துறையையும் பொருளாதார கலாச்சார தத்துவார்த்த விசயங்களையும் என்னால் குறைகூறவும் விமர்சிக்கவும் முடியும். ஆனால், இது போல் பொதுவெளியில் உள்ள நடிகர்களையோ, சாமியார்களையோ, அல்லது எந்தவொரு தனிமனிதரைப் பற்றி கருத்து இருந்தாலும் அது என் வேலையில்லை என விட்டுவிடுவேன். அவனவனுக்கு ஒரு விசயத்தைச் செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

பொதுவெளியில் உள்ள ஒருவர், சில விசயங்களைச் செய்யலாம் செய்யக்கூடாது என்பது அப்பொழுது உள்ள சமூகத்தைப் பொறுத்தது!  ஒரு இடத்தில் சாராயம் விற்பதும், பலியிடுதலும் சரியாக இருக்கும், இன்னொரு இடத்தில் அதே விசயம் தவறாகவும் இருக்கும். அதே இடத்திலேயே கூட ஒரு நேரம் சரியாக இருக்கும் மற்றொரு நேரம் தவறாகிவிடும்.

இப்படி ஒரே சமூகத்தில் பற்பல விசயங்கள் இருந்ததால் தான் யோகா, காமசூத்திரம், கொக்கோகம், நீதியொழுக்க நூற்கள் போன்ற (தோற்றத்தில் முரண்படும் தத்துவங்கள் ) எல்லாம் நம்மிடம் இருந்து வந்தது, காதல் களவு பற்றி எழுதியவர்கள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவர்கள், ஒரு சாமியார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லாததும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதும் நம் கலாச்சாரத்தில் உள்ள சுதந்திரம். அதைத் தடுப்பதை விமர்சிக்கிறேன். நீ என்ன சொல்கிறாயோ, பிஜேபி ஆட்களும் இதையே தான் செய்கிறார்கள். அதில் தான் பிரச்சினை.

எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மிகப் பெரிய சுதந்திரம் மட்டுமல்ல அது மிகப் பெரிய பொறுப்பும் ஆகும்.  உதாரணத்திற்கு, இதையே ஹிட்லர் செய்தார், அவர் கூட்டத்தை விரிவுபடுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஆரியர்கள்’ யாரோடு வேண்டுமானாலும் கூடலாம் என்று ஒரு ஏற்பாடு இருந்தது, அப்படி உருவான பல அனாதைகள் இருந்தனர்.  இதே மாதிரி ஒருக் கூற்றையே கணவன் மனைவி பெற்று குழந்தைகளை தனித்து விடுவதை பெரியார் அவர்தம் உடோபியன் சமூகத்தில் பரிந்துரைத்தார். சொன்னதன் நோக்கம், கிட்டத்தட்ட இரண்டுக்கும் ஒன்று தான். ஆனால் எதை முன்னிறுத்தி அதைச் சொல்கிறார்கள் என்பது மிக முக்கியம். ஆயினும் மிகப் பெரிய சுதந்திரம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம், என்பதே இவ்வெடுத்துக்காட்டின் கருத்து.

வேறு மதங்கள் பிறந்த கலாச்சாரங்கள் போலல்லாமல், நம் கலாச்சாரம் இல்லறம், காடேகுதல், இல்லறத்தில் பிரம்மச்சரியம்/ இல்லறத்துறவு என ஒருங்கே பல முரண்பாடான விசயங்களை அமைக்கிறது, வாழ்க்கையின் வேறுபட்ட விசயங்கள் சில முக்கியமானவற்றை விளங்க வைக்கும் என்பதே அதன் சாராம்சம். இவ்விடத்தில், தந்திர யோக முறைகளில் சில உண்டு, அதை அவர் பயன்படுத்தியிருக்கலாம், அம்மாதிரியானவை சாதாரண ஆட்களுக்கு தவறாகத் தான் தெரியும். வேறுமாதிரி கூறினால், கோவிலில் அபிசேகம் எதற்கு, அதை பசித்தவருக்குத் தரலாமே என்ற நோக்கில் பார்ப்பது போல் பார்த்தால், கோவில்சிலைகளுக்கு செய்யவேண்டியவையென சில முறைகள் தடைபடும். ஒன்றை விட்டு ஒன்றை எப்பொழுதும் பிடிப்போம் ஆனால், அது எதன் பொருட்டு நியாயம் என்பதையும் எது தர்மம் என்றும் யாராலும் அறுதியிட்டு எல்லாம் சொல்ல முடியாது. சொன்னால், ஹிட்லர் செய்தது போலவும், இப்பொழுது இந்துத்துவ குழுக்கள் செய்வது போலவும் ஆகிவிடும்.

ஒழுக்கவாதி: ஆனால், முன்னால் இருந்த சாமியார்கள், ஞானியர் எல்லாம் தமக்கென்று ஒரு ஒழுக்கத்தை வைத்துள்ளனர்.  அதனால் அஞ்ஞானியே, உன் பதிலில் திருப்தியில்லை.  [அக்காலத்தில் ஹிட்லரை ஒப்புக் கொண்டார்கள் அவர் மாவீரனாய் பார்க்கப்பட்டார், ஆனால் தற்பொழுது அப்படியில்லை.]

அஞ்ஞானி:  உனக்கு நான் எழுதியது புரியவில்லையென்பது தெரிகிறது!

முதலில், நான் உனக்கு பதில் சொல்லவில்லை!  நான் கூறியதெல்லாம்  உலகத்தில் நடந்த நடக்கும் விசயங்களையேக் கூறியுள்ளேன். அதனால் நீ திருப்தி அடைவதற்கும் அடையாததற்கும் அதில் ஒன்றுமிலலை.  கொஞ்சம் நேராக, முகத்திலடித்தாற் போல், பதில் சொன்னால் உனக்குப் புரியலாம்.

நீ புத்தர் பற்றியெல்லாம் பேசுகிறாய், ஆனால் அவர் தத்துவத்தைப் பற்றி என்னப் படித்தாய் எனத் தெரியவில்லை. பெரிய ஆட்களின் பெயரில் வரும் பொன்மொழிகளூம் அவர்களைப் பற்றிய எல்லாக் கதைகளும் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு அப்படி நிறைய பொய்யானவை உலவுகின்றன. நிசமாகவே புத்தரைப் படிக்க வேண்டுமென்றால், நீ அவரின் சுக்தங்களைப் படித்தால் தான் அவரைப் பற்றிப் பேச முடியும்.

விவேகானந்தர் புத்தர் போன்ற ஞானியர் எல்லாரும் வாழ்க்கையை நாம் இப்படி அணுகுவது போல் அணுகவில்லை.  ஒரு எடுத்துக்காட்டாக, புத்தர் அவருடைய சோதனையொன்றில், பல உயிரினங்களின் சாணத்தை எடுத்துத் தின்றதாக சாதகக் கதைகள் உண்டு.  பயங்கொள்ளாதிரு எனக் கூறிய விவேகானந்தர், மிகவும் பயந்த சம்பவங்களில் இருந்தே அதைக் கற்றுக் கொண்டார். இதன் அர்த்தம்,  நீ கற்க வேண்டுமென்றால், நிஜமாகவே கற்க வேண்டும், இது தான் சரி, இது தான் தவறு என்பதெல்லாம் கற்பவனின் வேலை கிடையாது,  அல்லது குறைந்தபட்சம் நமக்குத் தெரிந்தது எல்லாம், நாம் அடுத்தவனின் சோதனைகளைப் படித்தது கேட்டதால் தான் என்றும் அடுத்தவன் சொன்னதால் தான் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும்.

உனக்கு வர்ணாசிரமம், வேதம், தந்திரம், பெரியார், ஹிட்லர் –(மாவீரன் என்பதெல்லாம் சும்மா கதை,  மேலும் ஹிட்லரை அந்தக் காலத்திலேயே வையாத ஆள் கிடையாது நம் காந்தி முதல் ஹிட்லரின் ஆரிய படைத்தலைவர்கள் வரை பலர் விமர்சித்தனர். பல முறை அவரின் படையாட்களே கொல்ல முயற்சி செய்தும்,  முடியவில்லை)..– இவை எல்லாம் சொன்னது நீ ஒத்துக் கொள்வதற்காக இல்லை, அவையெல்லாம் நடப்பவை நடந்தவை.  மேலும் உன் கருத்துகளில், சில கேள்விகள் நீ கேட்டிருந்தாய், அந்த கேள்விகளுக்கும் நாம் பேசுவதற்கும் பெரிதாக சம்பந்தமில்லை, ஆனாலும், அதற்கானப் பதிலைக் கூறுகிறேன்.

வேதம் என்ன சொன்னது என்று நீ படித்து அறியவில்லை என நினைக்கிறேன், அப்படியிருக்கும் பட்சத்தில், அதனால், வேதம் சொன்னது பொய்யா என்றோ, வேதம் படி நடக்கிறார்களா என்று வேதத்தைப் பற்றித் தெரியாமலேயே அல்லது ஒன்றைப் பற்றித் தெரியாமலேயே அதைப் பற்றி பேசுவது ஞானத்தைப் பெற வேண்டும் என்று நினைப்பவன் செய்யும் செயலா?!  இருக்கட்டும், இருப்பினும் அதற்காகவே  தான் தந்திர முறைகளைப் பற்றிக் கோடுகாட்டியிருந்தேன், (ஆனால் அது என்னவென வேண்டுமென்றே நான் கூறவில்லை, நீ அதைப் பற்றி கேட்பாய் என நினைத்தேன்)! 🙂

நீ யாரைப் பற்றிப் பேசுகிறாயோ அவரைப் பற்றிப் பெரிதாக நான் ஏதும் கூறவில்லையே அதையும் கவனித்திருப்பாய் என நினைக்கிறேன்.  அது ஏன் எனப் புரிந்திருந்தால் மட்டுமே, என் பதில் விளங்கும்.

நீ கற்க வேண்டுமென்றால், நிஜமாகவே கற்க வேண்டும், அப்படியில்லாமல், வெறும் பொழுதுபோக்குக்காகவும் புரணி பேசுவதிலும் இது தான் ஒழுக்கம், தேசபக்தி, தெய்வபக்தி, ஞானம், பகுத்தறிவு மண்ணு மட்டை என்றெல்லாம் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமலும் கற்க அணியமாய் இல்லாமலும் பேசுவதில் எனக்கு விருப்பமுமில்லை, நேரமும் இல்லை.  கற்பதாக இருந்தால் பேசலாம், இல்லையெனில், இப்படியே விடுவதே சிறந்தது! இல்லையெனில் இது துப்புரவாக வெட்டிவேலை.   :D

“மூத்தோர்-முதுநெல்லி”வாதி:   நீ இப்பொழுது தம்பிக்கு சொன்ன பாயிண்ட் ரொம்ப சரி அதாவது ஒரு விசயத்தை  அதை பற்றி நமக்கு முழுவதும் தெரியுமா என்று பார்த்து தான் சொல்ல வேண்டும் அதை விட்டு நம் கருத்த சொல்ல கூடாது ஒரு ஊர்ல ஒருத்தன் மோசம்னா அந்த ஊரா மோசம் இல்ல அது போல தான் இந்த சாமியார் விசயமும் இவன் மோசமெனில் மொத்த ஹிந்து மதமே மோசம் இல்லை அது போல நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை, ஒவ்வெரு விசயத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும் எனவே அனைத்தையும் தவறாக சொல்ல வேண்டாம்.

அஞ்ஞானி:  நம் ஒழுக்கவாதி தம்பி எல்லாவற்றையும் கேள்விகேட்டுப் பழகுகிறான், அது நல்ல விசயம் தான். ஆயினும் சில முற்சார்பு கொண்ட முடிவுகளை நம் எல்லோரையும் போல் அவனும் எடுக்கிறான்.  அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.   நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் எல்லாக் காலத்திலும் சரிப்பட்டுவருமா என நாம் தான் கண்டுணர வேண்டும்!

ஆதலால், முன்னாடியே அவர்கள் கூறியது சரியென்றோ தவறென்றோக் கூற முடியாது, வாழ்வதில் இருந்து அதன் அர்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கையை வாழ்வதைத் தவிர வேறென்ன வேலை நமக்கு!   நம் கண் முன்னாலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த விசயங்களும், ஹைதராபாத் பல்கலைக் கழகத்திலும் நடந்தவையெல்லாம், பழைமைக்கும் புதுமைக்கும் நடக்கும் யுத்தங்கள்.  சாதிகள்/சமூக நிலைகளையும் கொண்டிருந்த வேற்கத்தியர்களும் காலத்திற்கேற்ப மாற்றமடைந்துள்ளனர்.  நாமும் எதையெடுக்க வேண்டுமோ அதை எடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நம் இரத்தத்தினை எடுத்துப் பரிசோதித்தால் தெரியும் நாம் எல்லோரும் சொல்லும் ஜாதிக்கும் மரபணு சொல்லும் ஜாதிக்கும் உள்ள வித்தியாசம். 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது குப்தர்கள் காலம்,  தான் சாதிக்குள் கல்யாணம் பண்ணும் வழக்கம் பெருவாரியாகப் புகுத்தப்பட்டுள்ளது, என புதிய மரபணு ஆய்வு கூறியுள்ளது (சில வாரங்களுக்கு முன் வந்த ஆய்வுக் கட்டுரை! (http://www.pnas.org/content/113/6/1594.abstract).  இதன் அர்த்தம், நம் இரத்தத்தில் அனைத்து ஜாதியின் கூறுகளும் பெரும்பாலும் இருக்க வேண்டும்.  ஆக, 1500 வருடம் முன்னர் ஒரு மாற்றம் வந்துள்ளது,  1500 வருடம் முன்னால் இருந்ததும் முன்னோர் தான், அடுத்து வந்தவர்களும் முன்னோர் தான்.  இதில்  இருவரும் முன்னோர் தான்,  எது முன்னோர் சொன்னது?   1500 வருடம் முன்னாடி என்றால், வேதகாலத்தையொட்டி, அப்படியானால், வேதகாலத்தாட்கள் ஒழுங்காக இருந்துள்ளனர். இப்படி நமக்குத் தெரியாத பல விசயங்கள் உள்ளன..   நாம் தான் தெளிவைத் தேடிக் கொள்ளவேண்டும்.  அதன் துவக்கம் தான் இந்த உரையாடல்!

எல்லாவற்றையும் கேள்வி கேட்கலாம் புரட்சி செய்யலாம், அமைதியாகவும் வாழலாம், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்பதும் இரண்டுமே கர்மயோகத்தில் சேர்த்தி என்று கூறுவதும் தான் நம் கலாச்சாரத்தின் அழகு!!

ஒழுக்கவாதி: எல்லாம் சரி,  இவர் தனிமனிதர் கிடையாது.  இந்த ஆள் செய்வதெல்லாவற்றையும் செய்துவிட்டு தான் ஆண்மையற்றவன் என்று சொன்னாரே!  புத்தர் இல்லற வாழ்வைவிட்டு வந்தப் பின்னர் பிரம்மச்சாரியாய் தானே இருந்தார்.  [உள்ளர்த்தம்: சாமியாரானால் பிரம்மச்சரியம் அவசியம்.. இதே போல் அவரைத் தொடர்பவுரும் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு]

அஞ்ஞானி: பிரம்மச்சரியத்துக்கும் கல்யாணத்துக்கும் சம்பந்தம் கிடையாது. கல்யாணம் ஒருவர் கூட பிரம்மச்சாரியாய் இருக்கலாம், கல்யாணம் ஆகாத ஒருவர் பிரம்மச்சாரியாய் இல்லாமலும் இருக்கலாம்.  அவரின் யோகமுறையைப் பார்த்தால் தெரியும்.

 

எனக்கு இவரின் யோகமுறைத் தெரியாது, ஆனால், அவை தந்திர யோக சார்ந்தவையென்று என்னால் அவர்களின் சில முறைகளைக் கொண்டுக் கூற முடியும். அவை நாம் நினைப்பது போலானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. அவ்வளவு தான்! தனிமனிதன் என்பவன் எப்பொழுதும் தனிமனிதன் தான், சமூகம் கூட்டம் என்பதெல்லாம் எல்லோருடைய வசதிக்கானது.

ஒழுக்கவாதி:  நமக்குள் புரிதல் இல்லை எனத் தோன்றுகிறது! ஆனால் நீ வேறொருப் பாதையைக் காட்டுகிறாய்.  புரிதல் முக்கியம்தானே!

அஞ்ஞானி: இங்கு உன் புரிதலும் என் புரிதலும் ஒன்றும் செய்யப் போவது கிடையாது. அது அங்கு இருப்பதை அறிவதே முக்கியம். பிரம்மச்சரியம் பற்றியோ யோகம் பற்றியோ, தந்திரம் பற்றியோ குறைந்தபட்சம் அறிதல் நலம்!  அவற்றையெல்லாம் படித்தால் கூடப் புரியும், நீ கேள்விப்பட்டதற்கும் உண்மைக்கும் இடையேயான தூரம் எவ்வளவு என்பதை.


ஒரு மனிதனின் ஆண்மைத் தன்மையை மாற்றுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. யோகமுறையானாலும், அல்லது வேறு வேதி மருந்து வகையிலும் அதை மாற்றிவிடலாம். அது அவருக்கு சாத்தியமா இல்லையா என்பதெல்லாம் நம் விவாதத்திற்குரியது இல்லை. ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று இல்லை.  இப்பொழுது, புரிதல் முக்கியம் தான், ஆனால், அது எவ்வளவு சரியானது.. ஏனெனில் நம் புரிதலே முழுவுண்மையில்லை. உதாரணத்திற்கு, ஒரே நிறத்தைப் பார்க்கும் போது கூட நாம் இருவரும் மனிதர்களாகவும் அண்ணன் தம்பியாகவும் இருக்கும் போது கூட, உன் மூளையும் என் மூளையும் ஒரே அளவு நிறத்தைக் காண்பதில்லை. முழுவுண்மை மிகவும் வித்தியாசமானது. அதனால் புரிதல் என்பதே ஒரு எல்லைக்குட்பட்டது.

 திரும்பவும் சொல்கிறேன் நான் சொன்னதில் கருத்து என்ற ஒன்றிருந்தால் அது “கருத்தே இல்லாமல் இருப்பது, அதாவது, கற்றுக் கொண்டேயிரு!” என்ற ஒன்று தான்!   மற்றவையெல்லாம் வரலாறும் இருக்கும் தத்துவங்களும் மட்டுமே!  முடிவைத் தேடாதே… அவை நடந்தேத் தீரும்.  அறியாமையென்பதை உணர்வதே அறிவைத் தேடவைப்பது. ஆனால் அறிவுத் தெளிவு போல் தோன்றுவது/ இருப்பது உண்மையில் அறிவு கிடையாது, கிழக்கத்தியத் தத்துவங்களின் பிரகாரம்!
ஒரு தத்துவவியலாளர், ஒரு வசதியுமில்லாக்  காலத்திலேயே கிரேக்கர்களும் இந்தியர்களும் அவ்வளவு தத்துவம் வளர்த்தார்கள், ஆனால் தற்காலத்தில் உருப்படியாக ஒரு விவாதம் கூட நடைபெறுவதில்லை எனக் கூறியிருந்தார், ஆனால், அதுவே 30 வருடங்களுக்கு முந்தைய நூல்!   ஆனால் இப்படியெல்லாம் பேசுவதையும் எழுதுவதையும் பார்த்தால்,  நாம் இன்னும் பின்னோக்கி செல்கிறோம் என நினைக்கிறேன்.  “அறிவுக்கும்/கற்றலுக்கும் முகநூல் கேலிப்படங்களுக்கும் சந்தத்துடன் வரும் பொன்மொழிகளுக்கும் சம்பந்தமில்லை” எனக் கூறும் அளவுக்கே நம் அறிவு உள்ளதே.. 😦

கலாச்சாரக் கண்ணோட்டத்தில் தோற்றமுரண்!

நண்பர் சுதாகருக்கு அவர்களின் பிரித்தானிய ஆய்வுக்குழு தலைவர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக் கூற பிரயத்தனப்பட்டு தமிழில் எழுதி வாழ்த்தியதையொட்டியும் அதே நேரத்தில் இந்தியப் பாரம்பரியம் என்றால் என்னவெனத் தெரியாமல் இருந்தது பற்றியும், அதே சமயம், இந்தியத்தனமானது தான்சானியா நாட்டுப் பெண்ணை அவமானப்படுத்தியத் தருணத்தில் போகிற போக்கில் எழுதியது…

மற்ற நாட்டினர் நம்/கிழக்கத்திய கலாச்சாரங்களைப் பற்றிக் கற்கும் ஒரு ஆவல் உள்ளதை, பெரும்பாலான சமயங்களில் காண்கிறேன், இந்தியன் என்பதற்கான முன் முடிவுகள் இருந்தாலும், கவனித்து உள்வாங்குதல் அவர்களிடம் கற்க வேண்டிய ஒரு நல்ல குணம். என் குழுவில் இருந்த சில இந்தியர்கள், இந்தியாவையும் கலாச்சாரத்தையும் கேவலமாகக் குறிப்பிடுவதை பெரும் பாக்கியமாகக் கருதி செய்வார்கள். ஆயினும், என்வரையில் இந்தியத்தனம், “தமிழன் டா” எனக் காண்பிக்க நேரங்கள் வரும்பொழுது அதைக் காண்பிப்பதுண்டு. உதாரணத்துக்கு, எனது குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பொழுது, நானும் தமிழோடு ஆங்கிலம் அல்லது டாய்சில் எழுதுவதுண்டு!

இதில் மற்றநாட்டினர் நம் நாட்டவர்க்கு இந்தியராய் இருப்பதற்கு கூச்சமோ தாழ்வுமனப்பான்மையோ இருக்கிறதா எனவும் உங்களுக்கெல்லாம் identity crisis இருக்கிறதா என என்னிடம் கேட்கும் அளவுக்கு செய்திருக்கிறார்கள். எம் செர்மானிய நண்பர்கள், நிறைய நேரங்களில் நானும் என் தோழியையும் மட்டுமே இந்தியர்கள் போல் தெரிகிறீர்கள் என்பர். ஆனால், நம் நாட்டவர் நாங்கள் சேர்ந்து வாழ்வதைப் பார்க்கும் பொழுது, நாங்கள் இந்தியத் தன்மையோடு இருந்தாலும் எங்களின் வாழ்க்கையைக் கேட்டு ஒரு நிமிடம் நிலைதடுமாறுவதும் அப்பொழுது மட்டும் இந்தியக் கலாச்சாரத்தை அவர்களுக்குள் “பேசுவதும்” வேறுகதை!

இங்கு இந்திய விழாவொன்றில், “ஈஸ்வர், இந்தியனென்றாலே இவர்கள் கீழாகப் பேசுகிறார்கள், நீ தான் இவர்களுக்கு தக்கப் பதிலடி தரவேண்டும்” என என்னை இந்தியக் கலாச்சாரம் பற்றிப் பேச அழைத்தார்கள். போய் பேசும் பொழுது, தெரிந்தவற்றைப் பேசுவதில் என்ன இருக்கிறது என்பதால், பழைய விசயங்களில் நவீனக் கண்ணோட்டம் அமையுமாறு, வெவ்வேறு புதிய நிரூபணங்களையும் ஆய்வுகளையும், சிலவற்றில் சில வாரங்களுக்கு முன்னர் வந்த இனப் பண்பாட்டு மொழியியல் மற்றும் மரபியல் சார் ஆய்வுகளையும் என் உரையில் சேர்த்திருந்தேன். இதனிடையே அரங்கில் வேண்டிய வசதிகள் செய்யாமல் ஏகப்பட்டக் குழப்பங்கள் வேறு, இந்தக் குளறுபடிகளுக்கு நடுவிலும், பல வெளிநாட்டவர்கள் என்னுரை முடிந்த பின்னரும் ஆர்வமாக என்னிடம் பேசிக் கலந்து கொண்டார்கள். நம் நாட்டவர்கள் “நான் இதையெல்லாம் பள்ளியிலே படித்திருக்கிறேன்” என ஒருப் பொத்தாம் பொதுவான கருத்தைத் தெரிவித்தனர்! இதைக் கேட்டதும் என் தோழி “முடியல அத்தான், இவங்களோட! நம்ம வேலையை செஞ்சுட்டுக் கிளம்புவோமா..” என்றார்.

போதாதற்கு நம்மவர்களின் குளறுபடிகளை, முகத்திலறைந்தது போல் பேசுகிறோம் என்பதால், இன்னும் வசதியாக, “எங்களுக்கு இந்தியப் பாரம்பரியம், பணிவைப் போதித்திருக்கிறது ஆனால், நீங்கள் இந்தியப் பாரம்பரியம் என்னவென்றே அறியவில்லை” யெனப் போட்டார்களே, ஒரு போடு! அட, எப்படியாப்பட்டது அப்பா நீங்களறிந்த இந்தியப் பண்பாடு.. நல்லதாப் போச்சு நீங்க அங்கிட்டு இருங்க, நாங்க இங்கிட்டு இருக்கோம் என்று கூறிவிட்டோம்!! பெரும்பாலானோர்களுக்கு, நம் பாரம்பரியத்தை அறியவே நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை! இதில், அடுத்தவர்கள் நம் பாரம்பரியத்தைப் புகழ்ந்துரைத்தால், ஒன்று மறுதலிப்பது, அல்லது தேவையில்லாதவொன்றை ஏற்றிக் கூறுவது என வேறுநிலைக்கு செல்வதை நிறைய நேரம் கண்டிருக்கிறேன்!

இதில் வரிக்கு வரி மேற்கோளாகப் பல குறள்களைத் தரலாம்! ஆனாலும், பல விசயங்களிலும் சமயங்களிலும் எனக்கானது, இவ்விடத்தில் முரண்நகையாக அமைவதும், ஒரு சிறப்பு! “அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டிக் கொளல்!” (அவையறிதல்).

 பிற்சேர்க்கை:நேற்று சுதாகரின் பிரித்தானிய குழுவினர் தமிழில் வாழ்த்தளித்ததைப் பார்த்தோம் அல்லவா.. அந்நேரத்தில், எனக்குக் கிடைத்த ஒரு அனுபவத்தைக் கூற மறந்துவிட்டேன்.  ஏற்கனவே, இதைப் பற்றி சிலக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சரியாக, இன்று இராபர்ட் ஹோப்ஸ்டாட்டர் எனும் நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளரின் பிறந்த நாளாம்! பார்த்ததும் நினைவு வந்தது! இவரின் மகன் பேராசிரியர் டக்ளஸ் ஹோப்ஸ்டாட்டர், கணிதவியலாளரும் அறிதிறன் சார்ந்தப் புலங்களில் ஆராய்ச்சி செய்பவரும் ஆவார். இவருடைய மிகவும் புகழ்பெற்ற சனரஞ்சக “கோடல் எஸ்சர் பாஹ்” (Gödel, Escher, Bach) புத்தகத்துக்காக புலிட்சர் விருதைப் பெற்றவர். நான், அவரிடம் ஒருமுறை விவாதத்தில் ஈடுபட நேர்ந்தது. என்னுடைய பலக் காட்டமானக் கேள்விகளுக்கு அமைதியாகவும் பொறுப்புடனும் பதிலளித்திருந்தார். தவிரவும், தமிழ் பற்றி மிகவும் புகழ்ந்திருந்தார்.

அப்பொழுது, அவர் தமிழின் எழுத்துவடிவையும் இலக்கணத்தையும் பார்த்து வியந்து, தமிழைக் கற்றுக்கொண்டதாகவும், இன்னும் அந்நாட்களில் அவர் வாங்கிய விகடன் போன்ற சஞ்சிகைகளும், அவர் சேர்த்த தமிழ் புத்தகங்களும் இன்னும் அவரிடம் உள்ளதாகவும் அவ்வப்பொழுது தமிழில் படிப்பதாகவும் கூறினார்.

ம்ம்ம்ம்… நம் தமிழ் பெற்றோர்களை நினைத்தால் என்ன சொல்வதென்றே விளங்கவில்லை!

வார்த்தை விளையாட்டுகள்! தனித்தமிழ் வேட்கை?! :P ஒரு கருத்துத் திரட்டு

பத்மஶ்ரீ-பதும சிரி-பதுமத் திரு-தாமரைத்திரு எவ்வாறு அழைப்பது எனவும், தமிழில் சல்லிக்கட்டு என தமிழ்தழுவிவிட்டு ஆங்கில கீச்சுகளில் ஜல்லிக்கட்டு என ஆங்கிலம் அணைவதையும், கஜபாகு என்பது கயவாகு ஆனது எப்படி எனத் தொடங்கியப் பேச்சுகளினால், இடையில் நானும் விளையாண்டு பார்க்கலாம் என எண்ணியதன் விளைவே  இக்கட்டுரை, பேராசிரியர் செல்வக்குமார், கதிர் அண்ணன்மார், உமாமகேஸ்வரன், பி.ஏ. கிருட்டிணன், சுபாஷினி அவர்களின் கருத்துகளினாலும், அவற்றிற்கான என்னுடையப் பின்னூட்டங்களையும் கோத்து இணைத்திருக்கிறேன்.

மற்ற மொழிகளுக்கெல்லாம் ஒலிப்புமுறைகளை முறைதவறாமல் உட்கார்ந்து கற்கிறார்கள். ஆனால் தமிழில், வெற்றியை வெட்ரி என உச்சரிக்கிறார்களே என எண்ணியிருக்கையில், நேற்று ஏதோவொருக் காணொலியில், “கொட்டுகிற மழையில்” என்பது “கொட்டுற மழையில்” என நாம் பேசுவது போய் இப்பொழுது “கொற்ற மழையில்” என உச்சரிப்பதைக் கண்டு மிகவும் வருத்தமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், “கொற்றவை” எனப் படிக்க சொல்லியிருந்தால், “கொட்ட்ட்ரவை” என இரவைக் கொட்டப்பட்டிருக்கலாம்.  நாம், இதைப் போன்ற உச்சரிப்புப்பிழைகளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை. இதை மொழியின் பரிணாம வளர்ச்சியில் சேர்ப்பதா, பிற மொழித் தாக்கத்தில் விளைந்ததா, அல்லது மக்களுக்கு உண்மையில் உச்சரிக்கத் தெரியவில்லையா, சோம்பேறித்தனமா என ஒன்றும் விளங்கவில்லை. எனினும் இதற்கு செல்வா அண்ணா அவர்கள் கூறியது, உச்சரிக்கும் பொழுது இது போன்றத் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு, இருப்பினும் இதை ஆங்கிலஎழுத்துரு ஊடாக தமிழ் எழுதும் பொழுது பெருங்குழப்பம் உண்டுபண்ணுவதைக் கண்டதால் தான் அதைக் கொணர்ந்தேன்.

நண்பர் ஒருவர் ஸ், ஷ, ஶ, ஜ, போன்ற கடன்வாங்கிய எழுத்துகள் இருப்பது நல்லது தானே, இல்லாதது மொழிக்கு வறுமை எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் எடுத்துக்காட்டாய் வைத்தது, இளங்கோவடிகள் கயவாகு (கஜபாகு) எனக் குறிப்பிட்டிருந்தது. அவர் கயவாகு என்பதை, கயவன் என்பது மாதிரி ஒலிப்பதைத் தொடர்புப் படுத்தியிருக்கவேண்டும்.

நாம் ஜ ஒலிப்பை ச என்றோ ய என்றோ ஒலிப்பதும் உண்டு. இராஜன் – இராசன் – இராயன். பாலி, பிராகிருதிகளில் கூட இவ்வழக்கம் இருந்ததாய் படித்த ஞாபகம். இப்பொழுது கூட, யோகா என்பதை, வட இந்தியர்கள், ஜோகா என உச்சரிப்பதும் எழுதுவதும் உண்டு. மதுரைப்பக்கம் ஒலிப்புகளில் ச-விற்கான ஒலிப்புமாற்றத்தை நிறையக் காணலாம். ஜல்லி, ஜல்லிக்கட்டு, ஜீனி (சீனி சர்க்கரை), ஶாப்பிடுறியா/ ச்சாப்பிடுறியா, இது போல.

உண்மையில், அது கஜபாகு என்றே இருந்திருக்கவேண்டும், கயவாகு என்பது அதன் திரிபு, மேலும், வட்டார-சமகிருத-மொழிகளில் அவ்வாறு அழைத்திருப்பதால் தான் நாம் அவ்வாறுக் கூறப் பழகியிருக்க வேண்டும் என்றேக் கூறுகிறேன். மேலே நடராஜன் அவர்கள் கூறியிருப்பது போலவும் அமையும், ஆனால் அதன் தோற்றுவாயைப் பற்றியக் கேள்வியே கணன் சுவாமியின் கேள்வி என நினைக்கிறேன். சீனா- சீனம் எனக் கூறும் நாம், அவர்கள் நாட்டைஎப்படி உச்சரிக்கிறார்களோ அப்படியே உச்சரிப்பதில்லை, அது நம்மிடம் உள்ள பலுக்கலின் விளைவாய் வந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் உழப்புவது போல் நாம் பெரிதாக உழப்புவது இல்லை. ஐரோப்பியர்கள் கூட இருப்பதை இருப்பது போல் உச்சரிக்க விழைகிறார்கள். ஆயினும் ஒரு விசயத்தைப் பற்றித் தெரியாத போது, அவர்கள் மொழி விதிகளுக்குட்பட்டேப் பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக, என் (அப்பா) பெயரை இராயேந்திரன் என முதன்முறை, ஒரு ஐரோப்பியர் உச்சரித்ததும் உண்மையில் அசந்துவிட்டேன், கொஞ்சம் விட்டிருந்தால், உங்களுக்கு தமிழ் தெரியுமா எனக் கேட்டிருபபேன், செர்மானியர்கள் ஜ-வை ய என உச்சரிப்பவர்கள்.

எழுத்துகள் இல்லாதது நமது வறுமை என்பது சற்று மிகையானது, ஒவ்வொரு மொழிகளிலும் சில வேறுபட்ட ஒலிப்புகள் உள்ளன, எல்லா ஒலிப்பையும் நாம் பெற வேண்டுமென்ற அவசியமில்லை. சொட்டான் இடுதல் போன்ற ஒலிபபுகள் ஆப்பிரிக்க மொழிகளில் உள்ளன, இப்படிப் பார்த்து பார்த்து நம் மொழிகளில் சேர்க்கவும் செய்யலாம், செய்யாமலும் விடலாம். ஆனால் அதுத் தேவையா..

ஒரு வேளை அக்காலத்தில் கயவாகு எனப் படித்த உடன், அது ஒருவரின் பெயர் என தமிழர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அரைகுறையாய் தமிழ்நாட்டம் இல்லாதவர்கள் குழம்புவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.

நான் பள்ளிப் படிக்கும் போது, திருகளவியின் படம் வரைந்து, திருகளவி என்று எழுதியதை என் இயற்பியல் ஆசிரியர் ஒத்துக் கொள்ளவேயில்லை. அதை, திருகு அளவி என்றே நீ எழுதியிருக்க வேண்டும் என வாதிட்டார், காரணம் களவி –களவு செய்தலுக்கு–என்பதற்கு திரு அடைமொழி கொடுத்தது போல் உள்ளது என்றார். அப்படி எப்படிக் குழம்ப முடியும் என விளங்கவில்லை. புணர்ச்சியின் போது இருபொருள் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றாலும், இடம் பொருள் பொறுத்து அது மாறும் குணத்தை நம் மூளை மிக எளிதாக விளங்கிக் கொள்ளும் என்றேத் தோன்றுகிறது. தவிர, ஒரு சொல் பன்மொழியான, களவு என்பதை ஒரு பொருள் காணாமல்போகும் பொருட்டோ அதுபற்றியப் பேச்சின் பொருட்டோ திருட்டு எனவும் தலைவன்-தலைவி வாழ்க்கை முறைப் பற்றிப் பேசுங்கால், காதல் வாழ்க்கையெனவும் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

ஆழ்வார்கள் சிரிதரன், சீராமன் என்றுக் குறிப்பிட்டதைக் குறித்து பதுமசிரி எனக் குறிப்பிடலாம் என செல்வா அண்ணன் குறிப்பிட்டிருந்தார், இரவி அவர்கள் தாமரைத் திரு (அப்படிக் கூறக் கூடாது என சட்டம் இயற்றினார்களாம்… ) எனவும், பதுமத்திரு எனவும் குறிப்பிட்டிருந்தனர்.  ஶ்ரீரங்கம் சீரங்கம் என அழைக்கப்படுவதையும் சொல்லியிருந்தேன், ஆனால், அதை மறுத்து திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் எனவே இருக்கவேண்டும் என வேறொரு நண்பர் கூறியிருந்தார். மேலும், ஒரு படி மேலே போய் (கிருட்டிணன்) பக்ஷிராஜனைப் பறவைவேந்தனாக்கிவிட்டார்.

அவர் பறவைவேந்தன் என்றால், நான் அரவஞ்சூடியோன்!  என் சீனத் தோழி என் பெயரை எழுதுவதற்குள் படாதபாடுபட்டாள். ஆயினும் Eswar என்பதை நற்குணங்கள் கொண்ட எழுத்துகளாக வரைந்து காண்பித்ததும். பின்னர் ஈஸ்வர் எனபதைக் கடவுளாகவே எழுதுவது எப்படி என புரியாமலும் விழித்தாள், ஆனால் அது ஏன் என விளங்கவில்லை!

ஆயினும், பிரச்சனை எங்கிருந்து எனப் புரியவில்லையெனினும், தமிழை சரியாகப் பேசுவதா, அல்லது, தமிழ்ப்படுத்துவதா என்பதைப்பொறுத்து இரண்டும் சரிதான் என்பது என் பார்வை, ஆனால் இரண்டையும் வருந்தலைமுறையினருக்குத் தெரியச் செய்கிறோமா என்பது என் வருத்தம். தற்பொழுது தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவர்கள், ஆங்கிலவார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது, பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல், வினையுரிச்சொல் என எல்லாவற்றையும் கன்னாபின்னாவென்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள்.  இவர்களுக்கு தமிழும் வரமாட்டேன் என்கிறது, ஆங்கிலமும் வரமாட்டேன் என்கிறது.

துளியை துமியாக்கியதற்காக கலைவாணியே இறங்கி வந்து ஆமோதித்த கதையும் இங்கே உண்டு!  எந்நேரமும் ஒரு புதுவார்த்தை உருவாவதற்கு அணியமாய் இருத்தல் நல்ம் தான் எனினும், இலக்கணம், மொழிநடை என்பது, மனிதமூளையின் செயல்பாட்டினால் உருவாவது, ஆக, அதுவொரு இலக்கணத்தோடும் சமூக நடைமுறையாலும் மட்டும் மிக எளிதாக அமையக்கூடும்.  வடிவேலு அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளும் சொற்றொடர்களும் மிக அதிகமாக சமூகத்தால் ஏற்கப்பட்டதற்கானக் காரணமும் இதனூடாகவே நடந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.

Cozying upto One Lingo at the cost of Other’s linguicide! –தற்குறித்தனமான ஒற்றை மொழிவாதமும் உலகநடப்பும்

( கீழே தமிழிலும்)  I was in a friend’s place for his son’s birthday party, a few weeks ago.  It happened that I have invited myself into a conversation, as the conversation was about how important to know Hindi is!  I am trying to be polite about the conversation, I must say that they were discussing how it would be to have a single language policy!  We are the people of hundreds of languages and dialects, and the “unity in diversity” is a great politicized slogan of all the time, whether you mean/understand it!

The conversation was between me and a duo, a Tamil-Pondicherry friend, who was from Indian Institute of Science (IISc), mentioned how bad was his experience at the institute, as he could not communicate (?!) well with the Northern Indian people.   Another Telugu-friend, who was also proposing or having an inclination towards having a lingua-franca-type approach.   My stance was not against learning a new language, in fact, I wish to be a polyglot, but bullying their own language and the culture, is not acceptable.

I was also from similar environments at IIT Madras and MatScience-like institutes and my experiences were not similar, although.  At IISc, our group had majority of Bengalis. I never had any problems mingling with such groups.  May be, I am not talkative, still I could learn about their hobbies, arts and philosophy.

Anyway, coming back to the conversation, it’s a normal scene with the typical conversation-backdrops, as people tend to have their own opinions and generalize the cases and propose these kinds of concepts.  And I wanted to explain them what the present-day language-equality enthusiasts are into and their efforts in making the languages survive in this web-influenced society.  More than that, the politicized version of sanskritization and Hindi imposition attract the general ‘juntas’ with the flaunting concepts based on one-language and one-world-type (It’s the motto of Ham Radio operators, however that’s different!).

So, I kept trying to continue my conversation, but the conversation was not well-taken, may be my “aggressive-villager” (no political pun intended! 😀 ) approach and I could feel that I was like obnoxiously pro-Tamil, in their view.   Therefore, my opinions could not reach them so good!  So, thought of sharing ‘my’ experiences, which is not based on an individualistic perspective, but I just wanted to show what is happening in our society.

First assumption, which the friends “might have had” during the conversation was, Tamils are the lingo-fanatics.  Most of the northern Indian people speak Hindi; the worst part is, I could not even convey that not all the northies are Hindi-speaking.  Hindi opposition has been almost a century old problem (late 1930s); similarly, imposing Urdu over East Pakistan was the reason for the birth of independent Bangladesh.  These are all old stories.

There are many language enthusiasts like Mani Manivannan (Info-techie), Aazhi Senthil Nathan (activist), Garga Chatterjee (Prof from ISI Kolkata), Joga Virk, Dhairya Kant Mishra, et al, were the key people for the recent Chennai conference for language equality held in last September 2015.

Even the prominent languages are suffering a lot in this IT era, then how about the language isolates and other fading northern-Dravidian languages?  There is always a mental dichotomy in dealing with these stuffs.   Anyway, you must know that there are plenty of foreign researchers who work on Tamil and there are constant inflow of Tamil-learning pupils in Polish, German, French universities and around the world.

Again, hundreds of times I have put the same thing in every conversation, but I feel no shame in sharing it again!  When I met with Prof. Ulrich Nikolas, Dr. Thomas Malten of Indology and Tamil dept of Koeln University, they have really tough time raising the funds for research.  They have been requesting the German, Tamil Nadu and Indian governments for the research grants to do research in Tamil.  Once, Dr. Thomas Malten was criticizing for my interest on ethnolinguistic research, as he was defending present-day need for Tamilology, he told me that how much works they have for centuries old Deutsch/German and its dialects, and

he asked me that “Tamil, aayira varushangal pazhamaiyaana oru mozhi! Aanaa adhukku eththanai akaraadhi irukku?? “(“Tamil is a language of thousands of years old!  But how many good lexicons you have?”), comparing the present-day Tamil scenario with other European languages.

Most importantly, the Tamil departments in the universities, around the world suffer a lot due to the funding and the diminishing enthusiasm (even its own people do not respect it!).  Worsening the situation further, Central government is not taking right actions for the Tamil departments in the Indian universities as well.  Whether you respect or disrespect or have discretion for your own language is the problem of an individual, but not supporting what others in need is definitely, a cruelty.

Even the EU has the toughest time and people start to think about the language equality and promoting the equality.  You may know that the EU languages (though De(utsch)nglish, Du(tch)nglish, Franglais, etc, are actually, not that much corrupted as we do to Tamil in Tamil Nadu.

At the same time, Scandinavian countries have been discussing on the mother-tongue based education as one of the fundamental rights, not only they were discussing, but also they have already implemented, encouraging and making proper arrangements in their schools for the students to learn/in their native tongue.  Tamil is also supported in their mother-tongue based education.

http://morsmal.no/index.php/ta/

But in Tamil Nadu, people do not even think about their own traditions and language.  It is viewed as an emotional thing to speak about the mother tongue.  You lose your language, you lose your identity.  As far as I have seen, people are not even in their first step of maturity to lose their identity.   It is that they speak out of charlatanry and nonsensical perceptions.   Any common man tend to take up a position, which is absolutely idiotic and ruthless.

One can be ignorant about what is happening around, but uttering on something, which you do not even know about, would definitely spoil the paths of the society.   Imposing something means you must be ready to be repulsed!

I used to playfully ask Dr. Thomas Malten of Indology and Tamil Dept of Koeln Univ.

“Neenga Tamizhara, Deutscheraa” (“Are you a Tamil or Deutscher/German?”),

and he used to reply

“Naan Tamil thaan, Thanjaavurkkaaran” (“I am a Tamil and a ‘native’ of Tanjavur/Tanjore”)

Seriously!  I think we have to take such people to Tamil Nadu! 😉
==============================
நண்பரின் பிள்ளையின் பிறந்தநாளைக் கொண்டாட அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன்,  நான் இருந்தும் இல்லாமலும் இருக்கும் இடமானாலும் பற்பலப் புதிய ஆட்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, வழக்கம் போல, அமைதியாக இருந்தவனை, தமிழ், இந்தி எனும் வார்த்தைகள் உசுப்பிவிட்டன.  சரி என்னப் பேசுகிறார்கள் எனப் பார்த்தால், நம் பக்கத்து பையன் ஒருவர், புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், இந்தி கற்காததால், எப்படியெல்லாம் வட இந்தியர்களிடம் கலக்க முடியாமல் இருந்தது எனக் குறைபட்டுக் கொண்டார்.   முதலிலேயேக் கூறிவிடுகிறேன், பலமொழிகள் கற்பதில் பிரச்சினையில்லை, ஆனால் ஒருமொழிக் கலாச்சாரம் என்பது உகந்ததல்ல.

நானும் அதே போன்ற சூழ்நிலையில் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும், கணித அறிவியற்கழகத்திலும் அதே சூழ்நிலையில் அறிவியல் கழகத்திலும் இருந்தவன் தான், என்னுடையத் துறையில், என்னையும் என் சில தென்னிந்திய நண்பர்களையும்தவிர்த்து அனைவரும் பெங்காலிகள் (உருதுவைத் திணித்ததற்காக, தனிநாட்டை உருவாக்கியவர்கள் அவர்கள், என்பது பழைய கதை!).   அந்தச் சூழ்நிலையில் தான் நாங்கள் வேலையும் செய்தோம், பிற விசயங்களையும் பரிமாறிக்கொள்வோம்.  அதான் ஆங்கிலம் இருக்கே எனக் கூறினாலும் அவர் இசைவதாய் தெரியவில்லை.  புரிந்து கொண்டாலும் புரியாதது மாதிரிப் பேசினால் வரும் கோபம், சற்று வித்தியாசமாக, சாதாரண விசயத்தைக் கூடப் பேச விடாது.  அட இவ்வளவு விசயங்கள் சொல்ல வேண்டியுள்ளதே, ஏன் சிறிய விசயத்தைக் கூட சொல்லமாட்டேன் என்கிறோம் எனத் தோன்றியது.  ஆயினும், இது நமக்குரிய இடமில்லை என “வான்சுதை வண்ணம் கொண்டே” பேசாமல் விட்டுவிட்டேன்.

அதில் இன்னொரு தெலுங்கு அம்மையாரும் அவர் பங்குக்கு இந்தி மாதிரி ஒரு மொழி வேண்டுமெனவும், ஒரு மொழி-ஒரு தேசம் கொள்கையை வழி மொழிந்து எனக்கு சுருதி ஏற்றிக்கொண்டிருந்தார்!  அவர்களின் பொறுப்பற்றக் கருத்துகளாலும், ஒரு கருத்தை அணுகமுடியாதத் தன்மையினாலும் என்னுள் இருந்த கிராமத்தான் எட்டிப்பார்த்து சிலம்பம் சுற்றிவிட்டான்.  ஆனால் அவர்கள் நீயா-நானா காலத்தவர்கள், ஆதலால், என் வாதம் காற்றில் கரைந்த சூடமாகிவிட்டது!  கடுஞ்சொல் கிராமத்தான் போலக் கண்டனர்.  சரி கழுதை போகட்டும் எனவிடலாம் எனில், எனைப் பெற்ற ஆத்தாளையேப் பார்த்து வருடங்கள் பல ஆகியிருந்தாலும், தமிழ் ஆத்தாளின் ஆதிக்கம் (மன்னிக்க! தமிழ் மக்காள்! அம்மா, ஆதிக்கம் போன்ற வார்த்தைகள், வெள்ளம்பாதித்த உங்களைப் பாதித்த அம்மாவைப் பற்றியது இல்லை!) சும்மா விடுவதில்லை, அது தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இதை எழுதுகிறேன் போல!

தனிநபராய் ஒரு பிரச்சினையை அணுகுவதற்கும் ஒரு சமூகமாய் அணுகுவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.  தனிநபராய் அணுகுங்கால், அப்படியே  என் வசதி, என் வாழ்க்கை, யாரையும் முடிந்த அளவு அமைதியாகப் போய்விடவேண்டும்.  சமூகமாய் அணுகும் போது நம் வசதியைப் பார்க்காமல் இருப்பது நல்லது.  அதைத் தான் சொல்ல முயன்றேன்!  இருக்கட்டும்!

வட இந்தியர்கள் அனைவரும் இந்தி பேசுவதில்லை என்பதையும், இந்த மொழித்திணிப்புக்கு கிட்டத்தட்ட நூறுவயதாகப் போகிறது எனவும் கூறத் தளைப்பட்ட எனக்கு, தலையிலேயேப்பட்டது போல் இருந்தது!  உருதுவைத் திணித்தார்கள், பங்களாதேசம் எனும் புது நாடு பிறந்தது! அதாவது, பிஹாரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கிளைமொழிகள் உள்ளன, அவற்றில் தனித்தனியான
எழுத்துவடிவங்கள் வேறு உள்ளன. சில வாரங்களுக்கு முன்னர், மைதிலி மொழி பேசும் பிகாரிகள் போராட்டத்திற்கு அப்புறம், மத்திய கல்வித்திட்டப் பள்ளிகளில், தாம் பேசும் பொழியிலேயேப் படிக்கப் போராடி வென்றுள்ளார்கள்.  இது இந்திப் பேசும் மாநிலங்களிலேயே இந்திக்கு எதிராகப் போராடுபவர்கள் பற்றியக் கதை இது!!!  இதுக்கு மேல் என்ன சொல்ல??

பழம்பெரும் மொழிகளே, இந்த தொலைத்தொடர்பு விசயங்களால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. செர்மனி, நெதர்லாந்து, பிரான்சிய இதர ஐரோப்பிய நாடுகள் எல்லாம், ஏற்கனவே டாய்ங்கிலீஷ் (செர்மன்), டங்கிலீஷ் (டச்சு), ப்ரான்க்லீஷ் போன்ற ஆங்கிலக் கலப்பிற்கு எதிராக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்தியாவில், மணிமணிவண்ணன், கார்கா சட்டர்ஜி, யோகி விக்ரா, தைரிய காந்த் மிஸ்ரா, ஆழி செந்தில்நாதன் என இன்னும் பலர் கடுமையாக  மொழித்திணிப்பிற்கு எதிராகவும், மொழியுரிமைக்காகவும் தொடர்ந்துப் பேசியும் கருத்தரங்குகளை நடாத்தியும் வருகின்றனர்.

நான் பல முறைக் கூறினாலும் சலிக்காமல் கூற விரும்பும் பேரா. உல்ரிக் நிக்கோல்சு, தாமஸ் மால்டன் அவர்களின் தமிழ் மொழி ஆர்வமும், அவரகள் கொலோன் பல்கலையில் தமிழ்த்துறையை நடத்தப் படும்பாட்டையும் நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்தவன். ஒரு வெளிநாட்டவர் “நான் தமிழன், தஞ்சாவூர்க்காரன்” எனக் கூற ஆசைப்படும் தாமஸ் மால்டன், என்னைக் கேட்டார், எங்கள் டாய்சு/செர்மனி மொழியின்  பேச்சுவழக்கு டாய்சுக்கு எவ்வளவு அகராதி பார்த்தாயா, ஆனால், உங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பார்த்த உங்கள் மொழிக்கு எவ்வளவு அகராதி உள்ளது எனக் கேட்டது மட்டுமில்லை, நான் வருத்தப்பட்டதை விட அவர் தான் மிகவும் வருத்தப்பட்டார்.  இவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையேயும், இன்னும் அவர்கள் அதே அளவு உற்சாகத்துடன் அத்துறையை நடத்திவருகிறார்கள்.

தொடர்ந்து, தமிழினைக் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அங்கங்கே உயர்வதும் குறைவதும் காணும் அதே நேரத்தில், செக்கில் பேரா. ஸ்வெலபில் அவர்களின் திறத்தாலும், போலந்தில் சிலப் பல்கலையின் தமிழ்த்துறையிலும் தொடர்ந்து பல மாணவர்கள் வருகிறார்கள்.  அவர்கள் மொழிகளை மதிக்க முடிந்ததால் தான் தமிழினை உணரமுடிகிறது.   இப்பொழுது மட்டும் ஐரோப்பிய மக்களுக்கு என்ன குறை, அவர்கள் மொழியில் தான் எல்லாம் இருக்கின்றன, ஆனாலும் மொழியுரிமையை முன்னெடுத்துச் செல்கின்றனர்.  ஆனால் நம்மவர்கள் இப்படி பண்ணுகிறார்களே!

இதில் ஸ்காண்டிநாவியன் நாடுகள், தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களில் தாய்ழொழியில் கல்வி கற்பது ஓர் உரிமையாகப் பேசப்பட்டு வருகிறது.  அவர்கள் அதற்கான ஏற்பாட்டினை ஏற்கனவே செய்துவருகிறார்கள்.  தமிழ்வழிக் கல்விக்கான அவர்களின் இணையதளம்.

http://morsmal.no/index.php/ta/

நம் நாட்டில், நம் மக்களின் முரட்டுத்தனமான நிலைப்பாட்டை நினைத்தால் மிகவும் கொடுமையாக உள்ளது.   படித்தவர்களும் இப்படிப் பேசுவது மிகவும் முட்டாள்தனமானது.

சில நூற்றாண்டுகளேப் பேசப்படும் மொழிக்காரர்களே தங்கள் நாட்டிற்கு செய்வதோடு, நம் மொழிக்கும்சேர்த்து யோசிக்கிறார்கள்.   ஆனால், நாம் தாய்மொழிப் பற்றற்றும், போதாக்குறைக்கு  நம்முடைய மத்திய மாநில அரசுகளோ இருப்பதைக் கெடுப்பதோடு, சல்லிக்கட்டு, மொழிஆய்வு நிறுவனங்கள் எனக் கொடுப்பது போல் கொடுத்து, கெடுப்பதும் ஒன்றும் சொல்லும்படியாக இல்லை.  நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.    இதில் அவர்கள் கெடுக்கும் முன்னரே அவரவர் அறிவீனத்தால், கெட்டு குட்டிச்சுவராய் போவேன் என்றால் நீங்கள் போங்கள், செய்பவர்களைச் செய்ய விடுங்கள்.  நான் முன்பேக் கூறியது போல் நீங்கள் உங்கள் அடையாளத்தையிழந்துவிடும் அளவுக்கெல்லாம் பக்குவமானவர்கள் இல்லை, இருந்தும் இப்படியேத் தொடரலாம் என எண்ணினீர்களேயானால் வரும் தலைமுறையினர் விபரீதமான விளைவுகளைக் காண நேரிடும்!

#வாழ்கதமிழ்
#StopHindiImposition
#StopHindiImperialism